"நரையேறா நினைவுகள்
முதல் காதலுக்கு
மட்டுமே சொந்தம்!"
"ஏன்டி! புள்ள வந்து வருசம் இருக்கும்ல, இந்த தடவை வருவான்னு நெனைக்கிறேன்" என்ற ஜீவா அப்பாவின் கண்களில் கண்ணீரோடு,குற்ற உணர்வும் குத்திட்டு நின்றன. " அவன் போகப்போக புரிஞ்சிப்பான், எல்லாம் அந்த மாரியாத்தா பாத்துப்பா" என்ற நம்பிக்கை தவிர வேறெதுவும் இல்லாதவளாய் சமையலைத் தொடர்ந்தாள் அவன் அம்மா.
அப்பாவுக்கு கூட்டுறவு தொழிற்சாலையில் பணி. உதவி என்றதும் ஓடக்கூடியவர். என்றாலும் பறம்புமலை வள்ளல் இவரில்லை. கொடுத்ததைக் கேட்டதும் பணத்தோடு உறவுகளும் விலகி ஓட எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். அம்மாவுக்கு விவசாயம், தையல் என குறைந்தது பத்து தொழில் தெரியும். நடுத்தரக் குடும்பம், வரவுக்கேற்ப செலவு எவ்வித தொல்லைகளும் இல்லாத இவர்களுக்கு மனப் புற்றுநோயாய் இருந்தது, மூத்தவன் வரவு நிகழாதது மட்டுமே. பாரியின் வரவறிய அப்பாவின் மொபைல் அழைப்பைத் தொடர்ந்திருந்தது.
அரவமில்லா அறையில், அணைத்துக் கிடந்த கம்பளியின் பிடியிலிருந்து பாரியை அதிர்ந்த அவனது மொபைல் விடுவித்தது. வேண்டா வெறுப்பாய் விழிகள் விரிய மெல்ல காதோரம் வைத்து "ஹ்ம்ம்" என்ற சொல்லில் தொடங்கியது அன்றைய நாள். "நீ வருவேன்னு எல்லாரும் பாத்துட்டு இருக்கோம். இந்த தடவையாவது மறக்காம வந்துடு சாமி" என்ற அப்பாவின் அழைப்புக்கு "பார்க்கலாம்" என்றவனாய் அழைப்பைத் துண்டித்தான். நீண்ட நேரம் உறங்கிப் போயிருந்த மூளை விழித்துக் கொண்டு பழைய நினைவுகளின் குளத்தில் மூழ்கிப்போய்க் கொண்டிருநக்க, நடந்தவை அனைத்தும் மனதில் நாடகமாய் ஓடத் தொடங்கியிருந்தது.
பாரி, காயத்ரி இருவரும் பள்ளி நண்பர்கள். பள்ளியில் படர்ந்த காதல் பத்து வருடங்களாய்த் தொடர்ந்திருந்தது. ஊர் முழுக்கத் தெரிந்திருந்த காதலுக்கு தடையாய்த் தாழிட்டுத் தடுத்தது சாதியெனும் கொடும்பேய் மட்டுமே. வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தவளை "பாட்டிக்கு சுகமில்ல, ஒரு எட்டு வந்து பாத்துட்டு போ கண்ணு" என்ற வார்த்தை சென்னை விமான நிலையம் வரை வரவைத்திருந்தது.
ESTÁS LEYENDO
காதலில் "அவன்"; காதலாய் "அவள்".
Romanceகாதல் என்பது ஒரு அழகான தென்றல்.. அது ஒருமுறையோடு மட்டும் தன் வரவை நிறுத்திக் கொள்வதில்லை.. சில நேரங்களில் இரண்டாம் தடவை கூட வாழ்க்கையில் வந்து செல்கிறது.. பாரியின் வாழ்க்கையில் வீசிய மறுதென்றல் அவன் வாழ்க்கைத் தோட்டத்தில் தங்கியதா இல்லை மீண்டும் அ...