3. Fire

152 23 44
                                    

"Did you call me Mommy?" என தன் crown ஐ சரி செய்தவாறு உள்ளே வந்தாள் Princess Helena.

"Yeah Princess! Queen Mary வந்திருக்காங்க." என Queen Victoria கூற "அவங்க தானே எப்ப பாரு எங்க Palace ல இருக்காங்க" என தனக்குள்ளே முணுமுணுத்து விட்டு "Hi Queen Mary" என சிறு புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்தாள் Princess Helena.

அவள் அருகில் வந்து முழங்கையால் தட்டி விட்ட Prince Tommy "எனக்கு கேட்டுறிச்சு!" என கண்ணடிக்க, Princess Helena "Oops! I'm sorry. I didn't mean it...I said..." என இழுக்க, "சரி விடு! எனக்கும் பழகி போச்சு!" என்றான்.

"Queen Mary, உன் dress அழகா இருக்கு!" என தேவையில்லாமல் ஒரு கேள்வியை Queen Victoria கேட்க "Actually இந்த dress ரொம்ப expensive. 10 000 பொற்காசுகள் பெறுமதியானது. இந்த dress design பண்ணப்பட்டது தங்க நூல்களால், painting பண்ணப்பட்டது amazon காட்டில உள்ள redwood tree இன் பட்டைகளை பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றினால், இதுல வந்துள்ள buttons சேற்றுநில முதலையின் பற்கள் மூலம் தயாரிக்கப்பட்டது & கழுத்து பகுதியில் உள்ள design albino peacock இன் இறகுகள்..." என தன்னை ஆடையை பற்றி வர்ணித்து கொண்டு செல்ல "அப்போ Queen Mary zoo ல இருக்க வேண்டியவ!" என்றாள் Princess Helena தனக்குள்ளே.

"Urmmm!" என்று தனக்கு கேட்டதாக எச்சரிக்கை செய்ய தொண்டையை சரி செய்தான் Prince Tommy. "அய்யோ sorry..." என Princess Helena  தனக்கு தானே குட்டு ஒன்றை போட்டுக் கொள்ள, servants tea time காக dinning hall ஐ அலங்கரித்தனர்.

விதவிதமான உணவு பண்டங்களும் குடிபானங்களும்  கண்ணை கவர்ந்தன.

பின் அனைவரும் சாப்பிட செல்ல, Princess Helena தன் வழமையான இடத்தில் அமர்ந்தாள். அவளுக்கு வலது பக்கம் Prince Tommy ஐ அமர வைத்து விட்டு, அவளின் இடது பக்கத்தில் அமர சென்றாள் Queen Mary.

அமர்ந்ததும் அவருக்கு ஏதோ ஒரு மாற்றம் தெரிய, எழுந்து நின்று அவர் அமர்ந்த கதிரையை பார்த்தார் Queen Mary.

அதில் யாரோ chocolate jar ஐ வைத்திருக்க, Queen Mary ன் 10 000 பொற்காசுகள் பெறுமதியான ஆடையை chocolate ஆக்கிரமித்து இருப்பதை உணர்ந்த Queen Mary அதிர்ச்சியில் அவளின் கையில் இருந்த fork ஐ பறக்க விட, அது போய் முன்னால் இருந்த அவரின் கணவரின் கையில் போய் குத்திப்பட்டது.

Royal friends👑 (Completed)Where stories live. Discover now