24. King's story

90 18 33
                                    

Queen Margaret நால்வரையும் கண்டு ஏதோ பேச வரும் போது, அவரை தெரியாமல் இடைமறித்த lady royal Elena "Queen Margaret, இவங்க எல்லாம் உங்க கிட்ட கதை கேட்க ஆசையாக இருக்காங்க. So can you tell a story for them?" என்று வினவ,

"Why not? I love to say stories for little buddies!" என்று queen Margaret கூற, அனைவரையும் story telling room னுள் கூட்டி சென்றனர்.

Pink mats உம் blue mats உம் கீழே விரித்து இருக்க, இளவரசிகள் pink mats லும் இளவரசர்கள் blue mats லும் உட்கார்ந்தனர்.

Princess Helena கு பக்கத்தில் princess Tanya உம் அவர்களுக்கு அடுத்த பக்கத்தில் prince Alex உம் prince fred உம் அமர்ந்திருந்தனர்.

"200 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்து 1000 மைல் தூரத்தில் ஒரு அரசன் ஆட்சி செய்து வந்தான்.

அவருடைய வீரம், பொறுமை, அதிர்ஷ்டம் மற்றும் அனுபவத்தின் மூலம் அவர் 1000 மைல் தொலைவிலிருக்கும் அனைத்து தீவுகளையும் ஆட்சி செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.

அத்துடன் அவர் இவ்வாறு ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்வதற்கு இன்னுமொரு காரணமாக அமைந்தது என்னவென்றால் அவரிடமிருந்த செங்கோலும் தன் பரம்பரை இரத்தத்தால் மட்டும் அழிய கூடிய சிவப்பு நிற பளிங்கு பதிக்கப்பட்ட கிரீடமும்.

இவ்விரண்டும் அவருக்கு அவர் ஆட்சி செய்த மொத்த 99 தீவுகளில் வாழ்கின்ற மக்களால் வழங்கப்பட்ட ஒரு பரிசு! அதனை தனதாக்கிக் கொள்ளும் எவரும் 1000 மைல் தூரத்தில் இருக்கும் அனைத்து தீவுகளையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யலாம்" என்று கூற,

Princess Helena ன் காதில் அருகில் வந்த princess Tanya "ஏன் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஆட்சி என்று சொல்றாங்க? ஒரு தொப்பியின் கீழ் ஆட்சி என்று சொல்லலாமே?" என்று பூமியின் நடுவே ஏதோ ஆராய்ச்சிகள் செய்யும் போது எழுந்த கேள்விகளை போல் கேட்டாள்.

"இப்போ அது தான் ரொம்ப முக்கியம்! குடை போட்டால் நனையாதாம். தொப்பி போட்டால் நனையுமாம். விளக்கம் போதுமா?

நீ ஒரு உலகம் பாரு fred அ! அவன் இன்னுமொரு உலகம். எங்கு வந்தேன் எதற்கு வந்தேன் என்று தெரியாமல் Queen Margaret சாப்பிட வைத்து இருக்கிற chocolate lemon bars ஐ வேட்டையாடி கொண்டிருக்கிறதை." என்று தலையில் அடித்து கொண்டாள் princess Helena.

Royal friends👑 (Completed)Where stories live. Discover now