32. The dragon lion

61 15 51
                                    

"உங்கள் நால்வரினதும் உறவுகள் வலுவடையும் போது, அதுவே இந்த உலகில் தீய சக்தி தலை தூக்க காரணமாக அமையும்"  என்று ஒரு குரல் கேட்க,

"ஆனாலும் மற்றைய மூன்று பரிசுகளுக்காக இந்த கிரீடத்தை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கானது"  என்று இன்னொரு குரல் பதிலளித்தது.

அதனை வைத்து விட்டு அரசர்கள் வர முன்னர் king James ன் மனைவி royal high school லுள்ள நூலகத்தினுள் சென்று, அங்கே எழுதப்பட்ட புத்தகத்தை மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைத்தார்.

நான்கு அரசர்களும் நடந்ததை மனைவியர்களிடம் கூற, எட்டு பேரும் மந்திரவாதிகளும் சேர்ந்து அந்த மாய சக்திகள் செய்த சாபத்தை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா என ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

இறுதியில் ஒரு மந்திரவாதி எழுந்து சற்று தயக்கத்துடன் தனது கருத்தை ஐ கூறினான்.

'அந்த மாய சக்தி கூறியபடி உங்கள் நால்வரினதும் தொடர்புகள் இருக்கும் போது தான் தீய சக்திகள் உருவாகும் என்றால் நீங்கள் நால்வரும் உங்களது தொடர்புகளை அதாவது நட்பை துண்டித்து கொண்டால் அந்த சாபம் பழிக்காமல் இருக்க வாய்ப்புண்டு. இதற்கு வேறு வழியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை' என்று அவன் கூற,

பல வருடங்களாக பேணி வந்த உயர்ந்த நட்பை ஒரு நொடியில் முறிப்பது என்பது எவ்வளவு வேதனையை தரும் என்பது யாவரும் அறிந்த விடயமே. எனினும் அவர்கள் அரசர்களாயிற்றே!

மக்களின் பணியாளராக இதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்த வரையறையிள் விழ, நான்கு அரசர்களும் மிகவும் கடினத்துடன் மனதை தைரியப்படுத்தி அவ்விடத்திலிருந்து பிரித்து நான்கு திசைகளில் சென்றனர்.

திசைகளே நான்காக பிரிந்தது வழிக்காட்டுவதற்காக அல்லவா!

அதற்கு பிறகு நான்கு இராச்சியங்களும் தங்களுக்கிடையிலான தொடர்புகள், பொருளாதார பந்தங்கள், சுற்றுலா பயணங்கள் என அனைத்தையும் நிறுத்திக் கொண்டன.

Royal friends👑 (Completed)Dove le storie prendono vita. Scoprilo ora