21. An accident

86 22 39
                                    

அவள் அதனை prince fred கு இடம் மாற்ற, அவனோ அதனை பிடிக்க தவறி விட்டான். திறப்போ நழுவி கீழே விழுந்து tiles இல் வழுக்கி சென்று ஒரு high heels ன் முன்னால் போய் தஞ்சமடைந்தது.

High heels கு சொந்தமானவள் திறப்புக்கு சொந்தமானவர்களை சுற்றிலும் முற்றிலும் பார்க்க, அங்கோ திறப்பை தொலைத்தது போல யாரும் reaction கொடுக்காததன் காரணமாக அவசர அவசரமாக அதனை தன் பையிற்குள் போட்டு கொண்டு அவ்விடத்தை விட்டு நகன்றாள்.

திறப்பு தொலைந்ததும் தெரியாது நால்வரும் princess Roquelle உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இடைவேளை முடிவடைந்த bell பட,  தன் நண்பர்களிடமிருந்து விடைபெற்று ஓட்டம் பிடித்தாள் princess Helena.

அவள் lady high royal ன் office ற்கு நுழையும் அந்த நொடியில் அவள் lady high royal திறப்பை அவரது  locker ல் போடுவதை கண்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.

உடனே சற்று வெளியே வந்து princess Tanya விற்கு திறப்பு  அவர்களிடம் உள்ளதா என்று உறுதிப்படுத்த குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு office னுள் நுழைய, அங்கு lady high royal princess Helena ஐ எதிர்பார்த்தவாறு நிலத்திற்கு ஆணி அடிப்பதை போல high heels ஆல் நிலத்தை தட்டி கொண்டிருந்தார்.

"You are five minutes late! இதற்கான தண்டனை, இந்த போத்தலில் உள்ள கண்ணாடி பந்துகளை எண்ணி சரியான எண்ணிக்கையை என்னிடம் கூற வேண்டும். நான் சிறிய வேலையொன்றுக்கு வெளியே போகிறேன். வரும் போது எண்ணி வைக்க வேண்டும். எனக்கு எத்தனை பந்துகள் இருக்கிறது என்பது இப்போதே தெரியும். So உன்னால் பொய் சொல்ல இயலாது. இது உன் பொறுமையை பரீட்சிக்கும் ஒரு பரீட்சை" என்று கூறி, மணற் கடிகாரமொன்றை திருப்பி வைத்து விட்டு சென்றார்.

ஆயிரக்கணக்கில் இருக்கும் அந்த பந்து குவளைகளை கண்டு சலித்து கொண்ட princess Helena வேறுவழியின்றி அவற்றை எண்ணுவதற்கு ஆரம்பித்தாள்.

"Hey helen! என்ன சின்ன பிள்ளை விளையாட்டு விளையாட்டுற! நீ ஒன்று இரண்டு மூன்று சொல்றது அங்க வரைக்கும் கேட்குது" என்றபடி உள்ளே prince fred நுழைய, நாற்பத்தைந்து எண்ணிக் கொண்டிருந்த princess Helena கு நாற்பத்தைந்தா இல்லை நாற்ப்பத்தேழா எண்ணினேன் என்பதை prince fred ன் பேச்சில் மறந்து விட்டாள்.

Royal friends👑 (Completed)Where stories live. Discover now