ஐயோ இருங்க இருங்க... அப்படி நான் சொல்லலங்க உங்கள பாத்து யாராவது சொல்லிருப்பாங்க, இல்லன்னா (இன்னும் மோசம் ) நீங்களே உங்களுக்கு சொல்லிக்கிட்ருப்பிங்க. அதை மாத்தணும். அதுக்கு ஒரு சின்ன game விளையாடலாம். கேள்வி பதில் விளையாட்டு. விளையாடலாமா...
Start
உங்களால முடியாதுன்னு நீங்க முடிவு பண்ண ஒரு விஷயத்தை நல்லா நெனவுல வெச்சுக்கோங்க. வெச்சிக்கிட்டு நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க.
1. முடியாது னு சொல்லுமுன்னாடி ஒரு வாட்டியாவது முயற்சி பண்ணிங்களா?
உங்க பதில் :
இல்லை : முயற்சி பண்ணா 50% தோல்வி தான் பண்ணலைனா 100%. இது உங்களுக்கே அநியாயமா இல்லையா. கொஞ்சம் முயற்சி பண்ணிட்டு முடிவுக்கு வரலாமே.. மேல படிங்க
ஆமாம் : super. தோற்காம ஜெயிக்க முடியாது. இப்போவே நீங்க பாதி ஜெயிச்ச மாதிரி தான் மேல படிங்க.2. நீங்க முயற்சி பண்ணும்போது உங்களால முடியும் னு நம்புனீங்களா?
உங்க பதில் :
(Confidence முக்கியம் அமைச்சரே )
இல்லை : சுத்தம். மொதல்ல நம்பனுங்க. நம்பி try பண்றவங்களுக்கே extra tips சொல்ல போறேன்.... தன்னம்பிக்கை இல்லனா ரொம்ப கஷ்டம். மனசு விடாம மேல படிங்க.
ஆமாம் : super !!! எந்த அளவுக்குனா அந்த முயற்சில நீங்க ஜெயிச்சுட்டதாவே நினைக்கணும். Daily தூங்குமுன்னாடி 10mins அதை ஒரு கனவா காணனும்(அதாவது ஜெயிச்சதுக்கப்புறம் உங்க plans enna? ஜெயிச்சா எவ்ளோ joly ah இருக்கும். அப்புடி ). அப்டினா நீங்க முக்கால்வாசி முடிச்ச மாதிரி. கடைசி கேள்வி.3.நீங்க முயற்சி பண்ற விஷயம் உண்மையாவே உங்களுக்கு பிடிச்சதா?
இல்லை :
அப்போ உங்களுக்கு பிடிக்கல. "எனக்கு பிடிக்கல", "என்னால முடியல / முடியாது " ரெண்டும் அப்படியே வேற வேற. உங்களுக்கு பிடிக்கலைன்னா அது விருப்பம்.
ஆனா...
உங்களால முடியாதுனு சொல்றது பச்சை பொய். யாரு சொன்னாலும் நம்பாதீங்க. தயவு செஞ்சு உங்களுக்கு நீங்களே சொல்லிக்காதிங்க please.ஆமாம்:
அப்போ ஒரு சின்ன change தான். உங்க முயற்சியை ரசிக்க பாருங்க. ரசனைல ஒரு விஷயம். என்னனா அது மாற்றத்தை தூண்டும். ஒவ்வொரு வாட்டி முயற்சிக்கும்போதும் முதல் தடவை முயற்சி பண்றமாதிரி இருக்கும்.
இப்போ சொல்லுங்க உங்களால முடியுமா முடியாதா....?
முடியுங்க. உங்களால முடியும்னு நானே நம்பறேன். நீங்களும் நம்புங்க.
All the best 🙂
(ஏதாவது புதுசா சொல்லிருப்பேன்னு நம்பறேன். ஆனா சொல்ல வந்ததை சொல்லிட்டேன்.
அவ்வளவுதான். இதுக்கு மேல பிடிச்சு முயற்சி பண்றதுல என்ன நன்மைனு சொல்றேன்.. விருப்பமிருந்தா... நேரமிருந்தா...படிங்க 🙂 )
உங்க முயற்சியை பிடிச்சு ரசிச்சு பண்ணா... பண்ணும்போதே சந்தோசமா இருக்கும். அதுவே ஒரு motivation ah மாறி மறுபடியும் செய்ய தூண்டும். (இல்ல பழக்க தோஷத்துலயாவது போய் நிப்பீங்க ) பழக்கமா மாறிடும்.
இதுல ரொம்ப ரொம்ப முக்கியம்...தோத்தாலும் ஒரு நாள் வருத்தப்படுவீங்க... அதுக்கும் கம்மியா கூட இருக்கும். உடனே எழுந்து மறுபடியும் முயற்சிக்க போவீங்க. But அந்த முயற்சியே பிடிக்கல வெறுப்பா இருக்குன்னா... நம்புங்க அந்த முயற்சியின் விளைவும் உங்களுக்கு பிடிக்காது. இல்லனா முயற்சியை உங்களுக்கு பிடிச்சமாதிரி மாத்திக்கோங்க. அப்போ தோத்துட்டு திரும்பி பாத்தாலும் நாம்ப சந்தோசமா இருந்தோம்னு தோணும். நிம்மதியா இருப்பிங்க. மறக்காதீங்க...
"தெய்வத்தால் ஆகா- -தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்".இப்படிக்கு,
தியோ.