Yess.... கதை தான். ஒரு ஊருல ராஜாவே இல்லையாம். ஏன்னா அங்க ஒரு வித்யாசமான வழக்கம். யாரு வேணாலும் ராஜாவா இருக்கலாம். ஆனா ஆறு மாசத்துக்கு தான் இருக்க முடியும். அப்புறம் அவங்க கழுத்துல கல்லை கட்டி கடல்ல தூக்கி போட்டுடுவாங்க. இதுக்கு பயந்து யாரும் அரசனாக விரும்பல. ஒருத்தனுக்கு வாழ்க்கை வெறுத்துச்சு. செத்துருவோம்னு முடிவு பண்ணி ராஜா ஆனான். ஆறு மாசம் நல்லா ஆண்டான். அரசன் இல்லாம பழகுன நாட்டுல எதுவுமே ஒழுங்கா இல்ல. ஆறு மாசம் முடிஞ்சுது. அவனை கல்லை கட்டி கடல்ல தள்ளுனாங்க.
ஆள் சாகல. ஏன்னா. அவனுக்கு அவன் நாட்டு நிலைமையை பார்த்ததும் வருத்தமாயிடுச்சு. நம்பள விட மோசமா ஒரு நாடே இருக்கேனு யோசிச்சான். ஆறு மாசம்னாலும் அரசனாச்சே. சாகுற ஆசை போய்டுச்சு. அரசனா இருக்கும்போதே அவனை தூக்கி போட போற கடலை சுத்தி வந்தான். ஒரு சின்ன தீவு இருந்துச்சு. அங்க இருந்தவங்க இயற்கையோட வாழ்ந்தாங்க. ஆனா எழுத்தறிவோ போர்பயிற்சியோ இல்ல. அத பார்த்ததும் இவன் அங்க போய் வெளிநாட்டுல இருந்து படிச்சவங்க...வீரர்கள வரவெச்சு தீவுவாசிகளுக்கு ரெண்டையும் கத்து குடுத்தான். அவங்களும் இவனை அரசனா ஏத்துக்கிட்டாங்க. அதுல சில பேர கூட்டி தான் correct ah இவனை கடல்ல போடற நாள்ல காப்பாத்திக்கிட்டான்.
அதோட நிக்கல. அதே தீவுவாசிகளை வெச்சி படை எடுத்து.. நாட்டை கைப்பற்றி திருத்தி ஒழுங்கு படுத்தினான். நாட்டை கல்வி கேள்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்க செய்தான்.
Moral:
1. எந்த நிலையிலும் நம்பிக்கையை கைவிட கூடாது.
2. எப்பவுமே நம்பள விட மோசமான நிலைமைல இருக்கவங்களும் இருப்பாங்க.. நல்லா இருக்கவங்களும் இருப்பாங்க.. அத கண்டுக்காம நம்மால முடிஞ்சவரை சந்தோசமா வாழனும். (முடிஞ்சா அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்)