என்னை எனக்கே பிடிக்கவில்லை...

22 5 2
                                    

காரணம் ஏன் தான் தெரியவில்லை... பழைய பாட்டு..கேட்டிருப்பிங்களா தெரியல. ஆனா இது அதை பத்தி இல்லை. இந்த மாதிரி உங்க மேலயே உங்களுக்கு வெறுப்பு இருக்கா... மேல படிங்க. எப்பவும் போல.. oru game.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர( role model மாதிரி ) நெனச்சுக்கோங்க... அடுத்து உங்களுக்கு ரொம்ப பிடிக்காத ஒருத்தர்.. அவங்களையும் நெனச்சுக்கோங்க.
இப்போ கேள்விக்கு வருவோம்.
1. உங்களுக்கு அவங்கள பிடிக்கும்னா ஏன் பிடிக்கும்? என்னென்ன விஷயங்கள் பிடிச்சது?
அதெல்லாத்தையும் ஒரு பக்கமா யோசிச்சு வெச்சுக்கோங்க.
2. உங்களுக்கு பிடிக்காதவங்க கிட்ட வருவோம். அவங்ககிட்ட உங்களுக்கு என்னென்ன பிடிக்கல? அதெல்லாம் தனியா யோசிச்சு வெச்சுக்கோங்க.

மொதல்ல வெறுப்பை கவனிப்போம். உங்களுக்கு பிடிக்காதவங்க அப்டினு முடிவு பண்ணவங்க கிட்ட
(அப்படி ஒருத்தங்களே இல்லியா.. நல்லது. இந்த para ah அப்படியே skip பண்ணிடுங்க )
"இதனால பிடிக்காது" அப்டினு சில காரணங்கள் எழுதிருப்பிங்கள்ல.. அதுல எதெல்லாம் உங்க கிட்ட இருக்குனு பாருங்க.
For example, பொய் சொல்லுவாங்க.. உம்முனு இருப்பாங்க.. சோம்பேறியா இருப்பாங்க (highlightu 😝) இதுல எதெல்லாம் உங்க கிட்ட இருக்கா னு பாருங்க. இதுல ஒன்னு உங்ககிட்ட இருந்தாலும்....FAIL!! அதெல்லாம் மொத்தமா மாத்தணும். அப்போ தான் வெறுப்பு போகும். இதெல்லாம் இல்லாம நீங்க இருக்கறதா நெனச்சு பாருங்க.. உங்களுக்கே புடிக்கும். இப்போ வெறுப்பை கவனிச்சாச்சு.

(உங்களுக்கு பிடிக்காதவங்கனு யாருமே இல்லனு சொன்னவங்க continue ) உங்களுக்கு பிடிச்சவங்கள இதனால பிடிக்கும்னு சொன்னிங்கள்ல (guess பண்ணிருப்பீங்க) அந்த விஷயம் எல்லாத்தையும் உங்ககிட்ட கொண்டு வரணும். அவங்க பேர்ல சரிதையோ சுய சரிதையோ இருக்கா (இங்க எனக்கு favourite அப்துல் கலாம் ஐயா ) அதை முழுசா படிங்க. உங்ககிட்ட என்னென்ன இல்லையோ அதெல்லாம் வளத்துக்கோங்க. அப்புறம் உங்களுக்கே உங்கள பிடிக்கும். சந்தோசமா இருப்பிங்க. இந்த மாதிரி யாரெல்லாம் inspiration, role model னு எல்லாம் நினைக்கிறிங்களோ அவங்கள எல்லாம் படிங்க. என்ன குறையுதுனு தெரியும். கஷ்டமும் இனிமையா இருக்கும். உழைப்பின் அருமை புரியும் (over ah pesrano). அவ்வளவுதான். அதாவது நமக்கு பிடிக்கிற நல்ல விஷயங்களை நம்ம கிட்ட மொதல்ல வளத்திக்கணும். அப்போ நிம்மதியா இருப்பிங்க.

"உள்ளுவ தெல்லாம்- -உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து"

மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு,
தியோ.

இதை படிக்காதீங்க... படிச்சா உருப்புடுவீங்க  😉Donde viven las historias. Descúbrelo ahora