அன்றைய தினம் கரு மேகங்கள் சூழ மரங்கள் காற்றில் ஆட கடும் மழைக்கு தயாராகி கொண்டிருந்தது மேகம். அத்தனை அழகாய் அந்த நேரம் காட்சியளிக்க அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தாள் ஒருத்தி..
கண்கள் ரத்த நிறத்தில் சிவந்திருக்க அதுவே காட்டியது அவள் கோவத்தின் அளவை. அத்தனை கோவம் ஏனோ அவளிடமே தான் கேட்க வேண்டும். ஆனால் சொல்லும் நிலையில் தான் அவளும் இல்லை.
அவள் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க மழையும் கொட்ட தொடங்கியது. மழையின் சாரலில் அவள் நடக்க ஈரப்பதத்தின் காரணமாக அவளுக்கு குளிர் எடுக்க கைகளால் உடலை கட்டி கொண்டு நடந்தாள்.
மழையில் நினைந்ததால் அவளது உடைகள் உடம்போடு ஒட்டி கொள்ள உதடுகள் குளிரில் நடுங்க அவள் அணிந்திருந்த ஆகாய நீல வண்ண சுடிதார் அவள் உடலின் பாகங்களை வெளிச்சம் போட்டு காட்ட செய்வதறியாது நிலையில் நடந்து சென்று கொன்றே இருந்தாள்.
ஒரு அளவுக்கு மேல் அவள் உடம்பும் மழையின் குளிரை தாங்க முடியாமல் விறைத்து போக யாருமில்லாத அந்த சாலை அவளுக்கு வசதியாக போக மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.
நேரம் செல்ல செல்ல மழை நன்றாக பிடித்துக் கொள்ள அவளின் உடம்பும் அவளுக்கு ஒத்துழைக்க மறுக்க தலை சுற்ற கண்கள் சொருக அந்த நேரம் அந்த வழியில் ஒரு மகிழுந்து வர தன்னிலை இழந்து அதன் மேலே விழுந்தாள் அவள்..
காரில் வந்தவனோ தன் காரில் விழுந்தவள் மேல் அதீத கோவத்தில் இறங்க அப்பொழுது தான் கண்டான். விழுந்தவள் இன்னும் எழ வில்லை. அதை கவனித்தவன் பதட்டத்தில் அவள் அருகில் சென்றான்.
அவளோ மயக்கத்தில் இருக்க அவள் அருகில் சென்றவனுக்கோ என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்க அவளின் கன்னத்தில் கை வைத்து தட்ட அவள் சுய நினைவின்றி அவன் மேலே சரிந்தாள்.
"ஹே பொண்ணு எழுந்திரு என்னாச்சி உனக்கு " என்று அவள் கன்னத்தில் தட்ட ஒரு அசைவும் இல்லை. அவனோ " அச்சோ எனக்கு இருக்குற டென்ஷன் ல இது வேறயா " என தலையில் அடித்து கொண்டு அவளை கைகளில் தூக்கி காரில் கிடத்தினான்.
YOU ARE READING
என் விடியல் நீயே 💖...
General Fictionஇருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....