அத்தியாயம் - 1

15.4K 221 34
                                    


ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 132 ஆண்டு பழமைவாய்ந்த அந்த பிரம்மாண்டமான வீடி (சத்ரபதி சிவாஜி டர்மினலஸ் ) ரயில் நிலையத்தில் கடல் மணலைப்போல கூட்டம் அலைமோதியது. பலவிதமான கடைகள் , பலவிதமான பாஷைகள், வெவ்வேறான முக அமைப்பை கொண்ட மக்கள். சாராய் சாரையாய் நீண்டு நின்ற வரிசைகள், பழுப்பு நிறத்தில் நெடிய பாம்பை வரிசையில் நிறுத்தியது போல காணப்பட்ட இரயில்கள் என்று திருவிழா கூட்டம் போல இருந்தது அந்த ரயில் நிலையம்.

எல்லோருக்கும் கூட்ட நெரிசல் பிடிக்காது. ஆனால் சிலருக்கு அதில் ஒரு த்ரில் இருக்கும். அழகுடன் கூடிய ஆச்சரியம் , அதிசயம் , அந்த நெரிசலில் கண்ணுக்கு கிடைக்கும் சில நல்ல காட்சிகள் என்று ரசிக்க தெரிந்த சில மனிதர்களும் உண்டு. அதுபோல ஒரு வழக்கு சொல் உண்டு. ' அழகு ஆபத்தானது ' என்று. அது உண்மையும் கூட. எல்லா அழகும் ஆபத்தானதுதான். சிலது ரசிக்கும் அளவுக்கு ஆபத்தானது. சிலது தலைதெறிக்க பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் அளவுக்கு ஆபத்தானது .

இந்த இரண்டு ஆபத்துகளையும் ஒன்றாக கொண்டதுதான் இன்றைய நகரங்கள். அல்ட்ரா சிட்டியில் வாழ்வதற்கு எல்லோருக்கும் ஆசைதான் சிலரை தவிர. ஆனால் அங்கெல்லாம் வாழ்வதற்கு நாம் அன்னப்பறவையின் குணத்தோடு இருக்க வேண்டும். வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டாதவைகளை விலக்க தெரிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் உன் வாழ்க்கை எவர் கையிலேயோ என்றாகிவிடும்.

இந்த ரயில் நிலையத்தில் இருந்த அழகும் அத்தகையதுதான். எங்கும் கண்ணை கவரும் ஒளிஜாலங்கள் இருந்தாலும் அதை ' ஐயோ எம்புட்டு அழகா இருக்குது ' என்று நாம் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தால் நாம் கூறிய 'ஐயோ ' வேறு குரலில் ஒலிக்கும் ' ஐயோ என் பர்ஸை காணவில்லையே ' என்று. மக்கள் தொகை கூட கூட பற்றாற்குறையும், அதனால் ஏற்படும் குற்றங்களும் கூடிக்கொண்டேதான் போகிறது. அதை தடுப்பவர்கள் தான் சிறந்த ஆட்சியாளர்கள். அப்படி ஒரு ஆட்சியாளர்களை எங்கே போய் தேடுவது?.  நாம் அனைவரும் வரலாற்றை படிக்கிறோம். பல தலைவர்களை பற்றி, அவர்களின் தியாகத்தை பற்றி. நம் வருங்கால சந்ததினர்களும் படிப்பார்கள் அதே வரலாற்றை. புதிதாக படிக்கும் அளவுக்கு தியாகிகளுக்கு தலைவர்களும் இன்று இருக்கிறார்களா என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.

மெல்லின காதல் (Completed)Where stories live. Discover now