அத்தியாயம் 15

3.2K 216 27
                                    

" வினு என் கையை பிடிச்சிக்கிறியா?  எனக்கு பயமா இருக்கு நடந்ததை நினைச்சி பார்க்க.   அந்த பயங்கரம்,  கொடூரம் எதுவுமே எனக்கு மறக்கல.  ஆனால் அதை வெளியே சொல்லும் அளவுக்கு எனக்கு சக்தியில்லையம்மா. " என்றாள் அவள் குரல் தழுதழுக்க.

'நீ எதுவும் சொல்ல வேண்டாம்'என்றுதான் சொல்ல நினைத்தான்.   ஆனால் அது முடியாதே.   அவளைப்பற்றிய உண்மை தெரிந்தால்தான் இவனால் ஏதாவது செய்ய முடியும்.   இப்படி இவள் அடுக்கடுக்கான கொலையை செய்வது ஒரு பக்கம்,  அதற்கு பிறகு அவள் இருக்கும் நிலை ஒருபக்கம்.   இதெல்லாம் ஒரு முடிவுக்கு வர அவள் பேசியாகவேண்டும் என்று நினைத்தவன்,

" ஹனி,  பயப்படாதே.  நான் உன்னை என் உயிருக்குள் வைத்து பூட்டியிருக்கறேன்.   உன்னை எந்த சக்தியாலும் தொட முடியாது" என்றவன் அவளை தன்னோடு அழுத்தமாக இழுத்து அணைத்தான்.   அவள் திரும்பி அவனின் மார்பில் தலையை வைத்துக்கொண்டு அவனின் கேசத்தை பற்றிக்கொண்டு பேச தொடங்கினாள்.

" தஞ்சாவூர் பக்கத்தில் அது ஒரு அழகான கிராமம் வினு.  ஆறு,  மலை,  காடு என்று எங்கேயும் இயற்கையின் வள்ளல் தன்னை தெரியும்.  விவசாய பூமி.  உழைச்சி உழைச்சி உரம் ஏறிப்போன உடம்போடு அங்கே அத்தனை பேரையும் பார்க்கலாம்.  ஆனால் என்ன? தனக்கென்று உழைக்காமல் பணத்தில் கொழுத்த பண்ணையார்களுக்காக உழைத்திருப்பார்கள்.  என் அப்பாவும்,  அம்மாவும் அப்படித்தான்.

அங்கே இருந்த ஒரு பண்ணையில் வேலைபார்த்துட்டு,  அவங்களோட இரண்டு பெண் குழந்தையோட அந்த ஓட்டு வீட்டில் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க.  எல்லாம் அந்த பொல்லாத நாள் வரும் வரைதான்.

என் அக்கா ராஜேஸ்வரி. என்னைவிட இரண்டு வயது மூத்தவள்.  ஒடிசலான உடம்பு.   நான் மகேஸ்வரி அப்போ கொஞ்சம் பூசினார் போல கொழு கொழுன்னு இருப்பேன். இரண்டு பேரும் அந்த ஊரில் இருந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம்.

ஒருநாள் இருட்டின நேரம் அப்பா என் அக்காவை இரண்டு கையிலே தூக்கிட்டு வந்தார். கூடவே வாயை முந்தானையில் மூடிக்கொண்டு அழுகையை அடக்கியப்படி அம்மா வந்தார்கள்.  எதுக்காக அழுறாங்க என்று எனக்கு தெரியல.

மெல்லின காதல் (Completed)Donde viven las historias. Descúbrelo ahora