அத்தியாயம் 13

3.5K 210 31
                                    

சிறு பூச்சியை கண்டால் அலறிக்கொண்டும் ஓடும் பலவீனம் கொண்ட பெண்கள் அநேகம்.   ம் என்பதற்குள் அழுது கரையும் பெண்களுக்கும் பஞ்சமில்லை.   சின்ன சின்ன பிரச்சனையை கையாள தெரியாமல் தவித்து துடிக்கும் பெண்களும் அநேகம்.   ஆனால் இதெல்லாம் அந்த காலம் என்று சொல்லும் அளவுக்கு பாரதி கண்ட புதுமை பெண்களாய்,  பூமியை துளைத்துக்கொண்டு வெளிவரும் விருட்சகமாக  மாறிக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மைதான்.   ஆனால் அந்த மாற்றம் நிகழ விழும் அடியும் அதிகம்தான்.   கருப்பாக இருக்கும் தங்கம் பொன்னிறமாக மாற தீக்குளிப்பது போல,  இந்த சமுதாயத்தில் வாழ பெண்கள் தினம் தினம் தீக்குளிக்கிறாள்.  அதன் பிறகு எந்த துன்பமும் அவர்களை சுனங்கச்செய்யாது.  அதுபோல தீக்குளித்து நிற்கும் பெண்ணாக நின்றாள் மகேஸ்வரி.

அவள் கண்ணில் பயமில்லை,  உயிர் போய்விடுமே என்ற பதப்பதைப்பு இல்லை.   தப்ப வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.   இவளின் நிமிர்வு,  நீங்காத புன்னகை எதிராளிக்கு பயத்தையும்,  கோபத்தையும் கொடுத்தது.

" இவள் பெண்ணா?  பேயா? " என்றெண்ணியவன் அவளின் கழுத்தை அறுப்பது என்ற முடிவில் உறுதியாகி தன் கத்தியின் பிடியை இருக்கிய போது சரியாக நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டை பெற்று கண் நிலைகுத்தி கீழே சரிந்தான்.   அந்த சத்தத்தில் அவளின் பார்வையில் கட்டுண்டு நின்றவன் உடல் உதறலுடன் சுயநினைவுக்கு வந்தான்.

சுயநினைவு பெற்றவன் அவள் நிற்கும் நிலையையும், அவள்  பின்னே தன் நண்பன் கண்ணை திறந்து கொண்டே உயிர்விட்டிருப்பதையும் பார்த்து கோபத்தில் அவளை நெருங்க போனான்.   அடுத்த குண்டு அவனின் கால் முட்டின் வழியாக உள்ளே சென்று அவன் நடையை முடக்கியது.  அப்போதும் அவளிடம் அசைவில்லை.  இவள் சிலையாக நிற்க தன்னை சுட்டது யார் என்று நினைத்தவன் திரும்பி பார்த்தான்.

அங்கே விக்ராந்தன் நின்றிருந்தான் கையில் துப்பாக்கியுடன்.  இவனுக்கு துப்பாக்கி எங்கேயிருந்து கிடைத்தது.  ஏற்கனவே அவனிடம் இருந்திருந்தால் அவன் ஏன் தங்களிடம் சிக்கினான் என்ற யோசனையில் இருந்தவனை கடந்து மகேஸ்வரியை அடைந்த விக்ராந்தன் அவளை அணைத்துக்கொண்டான்.

மெல்லின காதல் (Completed)Where stories live. Discover now