அத்தியாயம் 18

3.1K 221 23
                                    

" மகி ஒழுங்கா சாப்பிடு, நேரத்திற்கு வீடு வந்து சேரு. டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா இரு. டெய்லி போன் பண்ணு,  குட் நைட் சொல்லாம படுக்காதே. "என்று பேசிக்கொண்டிருந்தவனை கவனிக்காமல் தன் போனை திருப்பி திருப்பி பார்த்தாள் அவள்.

" நான் பேசுறது காதில் ஏறுதா இல்லையா. அதில் என்னத்தை தேடுற? " என்றான்.

" நீ இதிலே எதையோ பிக்ஸ் பண்ணுணியே அதைத்தான் தேடுறேன் " என்றாள் அவள்.

" நீ இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள மைக்ரோ ஜிப் செட் செய்துவைத்தேன். " என்றான்.

" ஓஓ acp கடமையை கரெக்ட்டா செய்கிறார்" என்றாள் அவள் உதட்டை பிதுங்கிக்கொண்டு.

" ஏர்போர்ட் என்று பார்க்கிறேன், இல்ல " என்றான் அவன்.

" இல்லன்னா? " என்று கேட்டவளின் காதில்
" எவ்வளவு நேரம் உன் உதடு என்னிடம் மாட்டிக்கும் என்று எனக்கே தெரியாது. நச்சுன்னு கிஸ் அடிப்பேன் " என்றான் அவன்.

" போடா லூசு " என்றாள் அவள் முகத்தை திருப்பிக்கொண்டு.

" நானே என் மனைவி தனியே போறாளே, எங்கே, எப்படி இருப்பாளோ? என்ற கிதக்கடியில் எல்லாத்தையும் செட் செய்தால் acp யாம். முதலில் நான் உன் புருஷன் என்று நியாபகம் இருக்கட்டும். " என்றான் அவன்.

அவளை அவளுடைய இருப்பிடத்தில் விட்டுவிட்டு அவள் வேலையில் சேர போகும் புது இடத்தையும் பற்றி தெரிந்து கொண்டு கிளம்பினான் அவன்.

அவளுக்கு நம்பிக்கையில்லை அவன் அங்கிருந்து கல்கத்தா சென்றிருப்பான் என்று. அவனுடைய தற்போதைய வேலை ஒரு குற்றவாளியான தன்னை கண்காணிப்பதுதான் என்பதாக அவள் நினைத்தாள். அவள் யூகம் சரியென்பது போல அவனும் அங்கேதான் இருந்தான், இவளைவிட்டு ஒரு, 30 கிலோமீட்டர் தொலைவில்.

கொலைக்கு காரணமானவரை கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது. ஆட்டோமெட்டிக்கா மேலிடத்திடமிருந்து விக்ராந்தனுக்கு பிரஷர் அதிகமானது.

மெல்லின காதல் (Completed)Where stories live. Discover now