பேஸ்புக் காதல், தோழன் ஐடியில் இருந்து உளவு பார்ப்பது எல்லாம் நிஜ வாழ்க்கையில் பலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள். இவை கதையில் வரும் போது மிக அழகாகவும் படிப்பதற்கு சுவாரசியமாகவும் இருந்தது.
இந்த கதையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக சிறு சிறு கதாபாத்திரங்களின் வகிபாகங்கள் கூட அழகாக படைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக பாவனா காரக்டர். வந்தது சில நொடிகள் என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த காரக்டர்.
பொதுவாக எனக்கு வில்லிகளை ரொம்ப பிடிக்கும், ஆனால் நான் வெறுத்த ஒரே வில்லி நிஷா. ஏனென்றால் அவள் வில்லிக்கு எல்லாம் வில்லி. தன் காதலனை அடைய அவள் போட்ட திட்டங்கள் எல்லாம் சூப்பர். ஆனால் அவன் மனைவியை அவளுடைய சுய விருப்பின் பெயரிலேயே காணாமல் போக செய்தது சூப்பர் வில்லத்தனம்.
ஷக்தி, கெளதம், அனு, விக்ரம் இந்த காரக்டர்கள் கூட சூப்பராக இருந்தது.
பொதுவாக எனக்கு எபிலோக்ஸ் பிடிக்காது. ஆனால் இந்த கதையில் எபிலோக் அவ்வளவு மோசம் என்று கூறும் அளவுக்கு இல்லாமல் நன்றாகவே இருந்தது.
எல்லாமே நல்லவை மட்டும்தானா என்றால்; சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் உள்ளது , பல இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளது( நீயெல்லாம் எழுத்து பிழை பத்தி பேசுறியேன்னு நீங்க எல்லோரும் நினைக்கிறது எனக்கு புரியுது).ஆனால் அவை எல்லாவற்றையும் கதை ஓட்டம் மழுங்கடிச்செய்கிறது.
ப்ளாஷ்பேக் காதல் மட்டும் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போனது போன்ற உணர்வு.
மொத்தத்தில் இந்த கதை ஒரு வாட்பேட்டின் சூப்பர் டூப்பர் ஹிட்.