ஏழை மகனும் ஏட்டுக் கல்வியும்

22 6 0
                                    

ஏழை மகனுக்கு
ஏட்டுக்கல்வி
எட்டாக்கனி

ஏடெங்கே!
ஏழைக்கேல்லாம்
காழ் வயிற்றுக்கஞ்சிக்கு
இந்தக்காடும் கடலுமல்லவா
கடைசிவரை.....

"ஏழைதானடா அப்துல் கலாம்"
இதுபோல் எத்தனை பேரை
உன்னால் சொல்லிட முடியும்

என் போல் கனவுகளுடன் வாழும்
பல்லாயிரம் பேரைப் பார்த்வன் நான்

அனைவரும் ஏழைகள்!

விலைபொருளாய் கல்வியின்று
பணத்திற்கடிமை
இனி ஏழைக்கெங்கேயது
எட்டும்?

ஏழைச் சொந்தங்களே!
காடும் கடலும்தானா
கடைசிவரை சொந்தம் நமக்கு?

கழனி செய்யும் நமக்கெல்லாம்
காழ் வயிற்றுக் கஞ்சிதானா?

இனி
எட்டாக்கனிதானா நமக்கெல்லாம்
ஏட்டுக்கல்வி?

எழுந்திட வேண்டாமா?
பள்ளிக்கூடப்பாடங்களை
பட்டறை போட்டுச் சொல்லிக்கொடுத்து
துட்டுக்கு மாறடிக்கும் துஷ்டரகளை
தட்டிக்கேட்டிட வேண்டாமா?

அவர்கள் செய்யும் சதியல்லவோ
எமக்கிங்கே விதி...

ஏழைக்கிங்கே
ஏட்டுக்கல்வியது
வாய்த்திடுமானால்

எட்டுத்திசையும் ஒலித்திடுமே
நம் தேசக் குரல்கள்

நாளெல்லாம் பிறப்பனரே
பல அப்துல் கலாம்கள்

சோற்றுப்பஞ்சம் தான்
பறந்திடுமே.....

வாழ்க்கையது பூஞ்சோலையாய்
மாறிடுமே......

இன்னும் எத்தனையோ விந்தைகள்
இயற்றிடலாம்
இந்த
எட்டாக்கனி நமக்கு
எட்டுமேயானால்.....

****

என் பாதை என் நியதி Where stories live. Discover now