Start writing your story
தலைப்பை பார்த்ததும் 'என்னடா ஒரு ஸ்டோரிக்கு இப்படி எல்லாமா தலைப்பு வைப்பாங்க, அப்படின்னு யோசிச்சுதான் இந்த கதைய படிக்க ஆரம்பித்தேன்.படிக்க ஆரம்பித்ததில் இருந்து அன்றிரவு என்னால் சரியாக உறங்க முடியவில்லை. கண்களில் கண்ணீரை வரவழைத்த ஒரு சில கதைகளில் இதுவும் ஒன்று.
கதையின் முதல் நாப்பது விகிதம் (நான் விகிதம் எல்லாம் சரியாக சொல்ல காரணம் கிண்டல் ரீடர் பாவிப்பதால்) பாலா,செளமியா,மாறன் இவர்கள் மட்டும்தான். அதில் மாறன் தான் வில்லன். அப்படி என்றால் செளமியா மற்றும் பாலாதான் ஹீரோ ஹீரோயின். அதுவும் 40- 70 விகிதம் வரை மாறன் தான் ஹீரோ ,இங்கும் செளமியாதான் ஹீரோயின். ஆனால் இங்கு வேண்டத்தகாத கதாப்பாத்திரம் பாலா. அவனது பாத்திரத்தை என்னால் வில்லன் என்று குறிப்பிட முடியவில்லை. மீதி முப்பது விகிரம் கண்டிப்பாக ஹீரோ ,ஹீரோயின் இல்லாமல் கெஸ்ட் ரோல்களுடன் கதை முடிந்தது என்பதுதான் உண்மை. ஏனெனில் கடைசி முப்பது விகித கதையில் எல்லோருமே எனக்கு கெஸ்ட் ரோல் போன்றதுதான் தோன்றியது. இப்படி ஒரு மாடுலேசனில் ஒரு கதை நான் படித்தது இதுதான் முதல் தடவை.இதற்னே எழுத்தாளருக்கு ஒரு பெரிய பாராட்டு கூறலாம்.
செளமியா-பாலாவின் காதல் கண்டிப்பாக எல்லா 90s கிட்ஸ்கும் இருக்கும். அது ஒரு 'பூவே உனக்காக' காதல். மிகவும் அழகான ரம்மியமான நம்மை எப்போதும் புன்னகைக்க வைக்கும் காதல். அதில் ஒரு துளியளவும் காமல் இருக்காது. அதில் இருப்பது காதல்,காதல் மட்டுமே. அதிலும் குறிப்பாக பாலா அவளுக்கு அல்ஜீப்ரா க்லாஸ் எடுப்பது எல்லாம் செம்ம ரைட்டிங்க்.
எனக்கு இந்த கதையில் மாறனை ரொம்பவும் பிடிக்கும்,காரணம் மாறன் தான் நாம் எல்லோரும். அவன் தான் நிஜமாக நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு சராசரி ஆண் மகன்.பாலா போன்றவன் எப்படியும் குறித்த காலத்திற்கு பின் மாறிவிடுவான்.ஆனால் மாறன் போன்றவன் என்றுமே மாறமாட்டான். இந்த கதையில் கூட மாறனின் காதல்தான் முதலில் ஜெயிச்சது.
மனோகர் மாமா, இளா..இவர்களின் காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். எப்படி எழுத்தாளர் இவ்வளவு ஜாலியாக அந்த சாப்டர்களை எழுதினார் என்று புரியவே இல்லை.அதிலும் குறிப்பாக ஹாஸ்பிடலில் நர்ஸ், டாக்டர் ,பிரியானி சீன் எல்லாம் சூப்பர்.
"HBO, Little Boy, Explanation about zero, Gone Girl" இதெல்லாம் நீங்கள் உங்கள் கதைகளில் கூறியதில் இருந்து கண்டிப்பாக சில உலகத்தரம் வாயந்த சினிமாக்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று புரிகின்றது. நமக்கு பிடித்த விடயங்களை கதைகளில் கானும் போது நமக்கு மிகவும் சந்தோசமாகவும் இருக்கும்.
மாறன் - செளமியா திருமன சீனை ஒரு சுடுகாட்டு சீனுடன் ஒப்பிட்டு எழுதியது எல்லாம் என்னால் என்னவென்று விமர்சிப்பது என்று புரியவில்லை. ஆனால் கடைசியாக மாறனின் காதலை செளமியா ஏற்றுக்கொண்டாளா இல்லையா என்பது வாசகர்களிடம் ஆசிரியர் விட்டுள்ளார் என்பதே உண்மை. ஒருவேலை பாலா அந்த இடத்தில் இருப்பதை கண்ட அவள் மாறனிடம் அன்பாக இருப்பது போல் கூட நடித்திருக்கலாம்.
இன்னும் நிறைய பேசலாம் இந்த கதையை பற்றி. ஒவ்வொரு இடத்திலும் ஏதாவது சிறிய சிறிய தகவல்களை விட்டுக்கொண்டே சென்றீர்கள். இந்த கதைக்காக நீங்கள் பேக்ரவுண்ட் வேர்க் அதிகமாக செய்துள்ளீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகின்றது.
எல்லாமே நல்லவை மட்டும்தானா என்றால், கண்டிப்பாக இல்லை.ஒரு சில நெகடிவ்ஸும் உண்டு. குறிப்பாக கடைசி 30 விகிதமான கதை மிகவும் மெதுவாக நகருகின்றது.முதல் 40 விகிதத்தில் இருந்த வேகம் இறுதியில் கொஞ்சம் தொய்வாக இருந்தது. ஷாலினி பாலாவிடம் அவளுடைய கடந்த காலத்தை கூறும் சீன் கொஞ்சம் இழுத்துக்கொண்டு சென்றது போல ஒரு உணர்வு.மற்றபடி குறை என்று கூற எனக்கு எதுவுமே தோன்றவில்லை.
மொத்தத்தில் இந்த கதை வாட்பெட்டின் மற்றுமொரு முத்து.
YOU ARE READING
கதை விமர்சனம்
Randomநான் படித்த எனக்கு பிடித்த கதைகள் பற்றிய விமர்சனம் (குறித்த ஆசிரியர்களின் அனுமதி பெற்று எழுதப்பட்டது)