(இவருடைய கதைக்கு நான் முதலில் இட்ட ரிவ்யூ)
முதலில் தலைப்பை படித்த போது அதில் இம்ப்ரஸ் ஆகி படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கே ஆச்சரியம்.இப்படி ஒரு நேர்த்தியான எழுத்து நடை மற்றும் சொற்களை பயனபடுத்தும் எழுத்தாளரை இந்த வாட்பெட்டில் நான் பார்த்ததில்லை.அதிலும் குறிப்பாக முதலவாது கதையே இவ்வளவு நேர்த்தி என்றால்...திறந்த வாய் மூடாமல் கொஞ்சம் பொறாமையுடன் படித்தேன்.
நாயகன் விஷ்வா,நாயகி மஹிமா. இவர்கள் இருவரை மட்டுமே சுற்றி செல்லும் ஒரு சிறிய கருவைக்கொண்ட கதை.ஒரு கதை என்பதற்கு கரு முக்கியம், ஏன் எழுத்து நடையில் பிழை இருந்தால் கூட கதையின் ஓட்டத்தில் அதை மறக்கச்செய்ய முடியும். பொதுவாக எனது கதைகளில் எழுத்து மற்றும் வசன நடையில் பிழைகள் அதிகமாக இருக்கும்.அதை மறைக்கவே அதிகமான டிவிஸ்ட் அன்ட் டேர்ன்ஸ் வைப்பேன். ஆனால் மிக மிக சிம்பிலான ஒரு கதை கருவை கையில் எடுத்து அதை தனது நேர்கொண்ட வசன நடை மற்றும் சொல்லாடல் மூலம் எழுத்தாளர் தனது கன்னிப்படைப்பினால் இந்த வாட்பெட்டுக்கு ஒரு செய்தி சொல்லியுள்ளார்.அது என்ன செய்தியெனில்
"மிக எளிமையான கருவை என் கைவண்ணத்தால் சிறந்த கதையாக மாற்றுவேன் "என்று.
நாயகி இன்டலிஜென்ட், நாயகன் சாதாரணமாக கதைகளில் வரும் ஒரு ஹீரோ.கதை கரு அவர்கள் லன்டன் செல்லும் வரை மிக சிறப்பாக இருந்தது.ஆனால் அவர்கள் லன்டன் சென்றதும் கதையானது ஒரு சினிமாத்தனமாக நகர தொடங்கிவிட்டது.அதிலும் குறிப்பாக லிவ் இன் ரிலேச்ன்சிப் கதைகள் எனக்கு பொதுவாக பிடிக்காது.
இருந்தாலும் மற்ற கதைகள் போல் அல்லாது அவர்கள் இருவருக்குமிடையில் நடக்கும் ஊடல் காட்சிகள் கூட முகம் சுழிக்க வைக்காமல் எழுதியமைக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு கைதட்டல்.
பாடசாலை மற்றும் கல்லூரி வாழ்க்கையை நிதர்சனமாக கண்முன் நிறுத்திய எழுத்தாளர் லண்டன் சென்றதும் கொஞ்சம் செயற்கைத்தனம் சேர்த்துக்கொண்டாரோ என்று எண்ண வேண்டியுள்ளது.
எது எப்படி எனினும் ஒரு கதை எப்படியான எழுத்து நடையில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உசாத்துனை..அதிலும் குறிப்பாக கதாபாத்திரங்கள் மனதில் நினைப்பதை "italic" இல் போட்டதெல்லாம் சூப்பர்.
கடைசியாக உங்கள் எழுத்துப் பணி மேலும் மேலும் மேம்பட வாழ்த்துகிறேன்.
உங்கள் ப்ரொபைல் பார்த்ததில் டாக்டர் என்றிருந்தது.உங்கள் தொழிற்துறையிலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்..
VOCÊ ESTÁ LENDO
கதை விமர்சனம்
Diversosநான் படித்த எனக்கு பிடித்த கதைகள் பற்றிய விமர்சனம் (குறித்த ஆசிரியர்களின் அனுமதி பெற்று எழுதப்பட்டது)