மிக நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று லைப்ரரியில் இருந்த ஒரு நாவல். பெயருக்காகவே நான் படிக்கவில்லை. காரணம் அதன் பெயர். அப்படி என்ன பெரிய தமிழ் வாட்பெட்டில் த்ரில்லர் கதை எழுதிவிடுவார்கள் என்ற எண்ணம் எனக்கு. அதை அப்படியே பொய்ப்பித்தது இந்த கதை.
தன் சகோதரி, மணைவி, நண்பனை கொல்பவர்களை பழிவாங்கும் ஒரு சாதாரண கதைதான். ஆனால் இது தமிழ் வாட்பெட்டுக்கு புதிது. அதுவும் இந்த அளவு extend லெவலில் கொலை பற்றிய description கொடுத்தது எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது.
கதைக்குள் சென்றாள்,
மேகா - சித்தார்த், பல்லவி - சித்தார்த், ரஞ்சனா - மகேஷ் மற்றும் ஆனந்த, அருன் வில்லன்களாக.கதை ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு தொய்வும் இல்லாமல் மிக சிறப்பாக நகர்கின்றது. அதிலும் குறிப்பாக பல்லவியின் இண்ட்றோ சீன் எல்லாம் as usual cliche தான் என்றாலும் ரசிக்கும்படி இருக்கின்றது. மேகாவை ஒரு மேல்தட்டு பெண்ணாக காட்டி அவள் மது அருந்துவதாக காட்டுவது எல்லாம் மிகவும் ரியலிஸ்ட்டிக்காக இருந்த்தது.
பல்லவி வரும் இடங்கள் எல்லாம் as usual தமிழ் ஹீரோயின் போல இருந்தாலும் சாகும் போது அவள் கூறும் அந்த வார்த்தைகள் "" . இந்த வார்த்தைகள் மிகவும் மனதை வலிக்கச் செய்த்தது. இந்த ஒரு வரியிலேயே அவளின் குறும்பு தனம் எல்லாம் மறைந்து அவளின் கஷ்டத்தை எழுத்தாளினி மிக சிறப்பாக கூறியிருந்தார். இப்படி ஒரு சீனை எழுதியமைக்கு என்னால் உங்களை தனியாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கடைசி அத்தியாயங்களில் மேகாவும் சித்தார்த்தும் ஒன்று சேருவார்கள் என நினைத்தேன். ஆனால் அதை பொய்ப்பித்தமைக்கு மிக்க நன்றிகள். இல்லை என்றால் இதுவும் வாட்பெட்டில் இருக்கும் ஆயிரம் கதைகளில் இருக்கும் முடிவுகளுடன் ஒன்றாக போய் இருக்கும். இருவரையும் சேராமல் வைத்ததே இந்த கதைக்கு மிகப்பெரிய பலம்.
எல்லாமே நல்லது மட்டும்தானா என்றால் இல்லை. சில நெகடிவ்ஸும் உண்டு.
குறிப்பாக இலங்கை வழக்கு தமிழ் பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. படிக்கும் போது ஒரு சில இடங்களில் அது ஒரு சிறிய pause ஐ ஏற்படுத்துகின்றது. மற்றபடி இந்த கதை ஒரு தமிழ் வாட்பெட்டுக்கு ஒரு பொக்கிசம் என்றே கூற வேண்டும். அதுவும் த்ரில்லர் கதை விரும்பிகளுக்கு இது ஒரு நல்ல விருந்து.
Happy Death Day.. வாட்பெட்டின் மற்றுமொரு ப்ளாக் பஸ்டர்.
nivitha
ESTÁS LEYENDO
கதை விமர்சனம்
De Todoநான் படித்த எனக்கு பிடித்த கதைகள் பற்றிய விமர்சனம் (குறித்த ஆசிரியர்களின் அனுமதி பெற்று எழுதப்பட்டது)