தோழனே துணையானவன் by @sengodi

98 8 5
                                    

சாதாரண காலேஜ் கதையில் ஆரம்பித்த கதை மிகவும் விறு விறுப்பாக நகர்ந்து கடைசியில் சுபமான முடிவை எட்டிய கதை.

யுவன் ஆதித்யா, மகிழினி, இளங்கதிர், அறிவழகன், விஷால், ஆரித் ஜென்ச எக்சட்றா எக்சட்றா....கதை கரு என்று பார்த்தால் வழமையாக நாம் பல படங்களில் அல்லது நாவல்கள் பார்த்த படித்த கதைதான். இருந்தாலும் எழுத்தாளினி அதை கையாண்டு இருந்த விதம் மிகவும் அழகாக இருந்தது.

இந்த கதையில் எனக்கு பர்சனலாகா ஹீரோயினை பிடிக்கவில்லை. ஹீரோயினை ரசிக்கலாம் என்று நினைக்கும் போது அதுல்யாவின் படம் ஒன்றை எழுத்தாளினி போஸ்ட் செய்வார்கள். உடனே மனம் ஹீரோயினை விட்டு வேறு காரக்டர்களிடம் தாவி விடும். அதுல்யாவை பிடிக்காது என்றில்லை. ஆனால் இந்த கதையின் ஹீரோயினாக அவரை வைத்து பார்க்க முடியவில்லை.

கதையில், ராஜ வம்ச அல்லது பண்டைய திருமன முறைமையினை மிக சிறப்பாக காட்டியிருந்தமை மிகவும் சூப்பராக இருந்தது. அந்த பகுதிகளை நான் மிகவும் ரசித்து படித்தேன். அதே ஹீரோயினின் தோழி இளங்கதிரின் தந்தை யார் என்ற முடிச்சை எழுத்தாளினி அவிழ்த்த விதம் அருமை.

இறுதி பகுதிகளில் மகிழினி கோபப்பட்டு பேசும் பேச்சுக்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்க கூடியதாகவும் இருந்தது. வாட்பெட்டில் ஒரு ஹீரோயின் இந்தளவு கோபப்பட்டு வீட்டில் இருக்கும் நண்டு சிண்டு வரை வெறுத்தது எனக்கு தெரிந்து இந்த கதையில்தான். எனக்கு மிகவும் பிடித்த டயலாக்ஸ் அவை.

இன்னுமொரு முக்கியமான விடயம், 29ம் அத்தியாயாதில் எழுத்தாளினி மறதி பற்றி ஒரு சிறு விளக்கம் எழுதியிருப்பார். இந்த கதையில் எனது முதல் வாவ் ஃபெக்டர் அதுதான். அதன் பிறகு வந்ததெல்லாம் சூப்பர். ஞாபகம் இல்லாதவர்கள் 29 வது அத்தியாயத்தின் முதல் மூன்று பந்திகளை படித்து பாருங்கள்.

இந்த கதை எழுத்தாளினிக்கு முதல் கதை. முதல் 15 பாகங்களை கொஞ்சம் பொறுமையாக பிழைகளை பொறுத்துக்கொண்டு படியுங்க. மீதி பகுதிகள் ஆரம்பத்தில் பொறுமையுடன் படித்ததற்கும் சேர்த்து சந்தோசப்படுவீர்கள். one of best transformation in tamil wattpad.

கதையில் எல்லாமே நல்லவை மட்டும்தானா என்றால்.. அதிகமான கதாபாத்திதங்கள் கதைக்குள் இருந்தமை சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

" தோழனே துணையானவன்" எல்லோரும் முகம் சுழிக்காமல் அமைதியாக ஜாலியாக படிக்க கூடிய ஒரு கதை. 

கதை விமர்சனம்Where stories live. Discover now