என்னுடைய முதல் சிறு கதைக்கான விமர்சனம். குறிப்பாக இந்த கதைக்கு விமர்சனம் கொடுக்க காரணம் இருக்கின்றது.
இந்த கதை ஒரு பெண்ணுக்குக் அவள் வளர்க்கும் காளை மற்றும் அவள் காதலிக்கும் தன் மாமனுக்கும் இடையிலானது. மிகவும் எளிமையான கதை ஆனாலும் எழுத்தாளினியின் சொல்லாற்றல் மற்றும், பேச்சு வழக்கில் கொடுத்தது இந்த கதையை மிகவுக் அழகாக்கியுள்ளது.
தான் வளர்க்கும் மாட்டை அடக்கினால்தான் நம் திருமணம் என்று அவள் மாமனிடம் கூற, அதை அவள் மாமன் நிறைவேற்றினானா என்பதே கதை.
மாமனா? இல்லை தான் வளர்த்த மகனா?(காளை) என வரும் போது வீரநாச்சியா, " ஏலே மருது, அள்ளிவீசிட்டு வீரா பக்கம் வாடா" என்று சொல்வதை படிக்கும் நமக்கு மெய்சிலிர்க்கின்றது.
அதுவும் காளைக்கு தன் தாயானவளின் காதல் தெரிய அவன் அவள் மாமனிடம் அடங்கிப்போவது எல்லாம் சூப்பரா சொல்லியிருந்த்தீங்க.
வீராநாச்சியா, எல்லா தந்தைகளும் எதிர்பார்க்கும் ஒரு மகள், எல்லா மாமனும் எதிர்பார்க்கும் ஒரு மாமன் மகள். வீர நாச்சி தன் தாயை புகழ்ந்து (😀😀) தன் தந்தையிடம் பேசுவதும், ஊர்க்காரர்கள் அவருக்கு மகன் இல்லாத குறையை வீரநாச்சி ஈடு செய்வாள் என்று கூறும் போது அவருக்கு தோன்றும் பெருமிதம் எல்லாம் அனுபவித்தாள் மாத்திரமே புரியும்.
கிராமிய பொங்களை கண்முன் கொண்டு வந்தமைக்கு எழுத்தாளினிக்கு மிகப்பெரிய கைதட்டல்கள்.
உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறப்பாக இறைவனை வேண்டுகிறேன்.
sengodiஇந்த கதை எழுத்தாளினியின் "கதை சொல்லவா" சிறு கதை தொகுப்பில் ஒன்றாக உள்ளது. படிக்க விருப்பம் உள்ளவர்கள் ஒரு பத்து நிமிடம் செலவு செய்தால் கண்டிப்பாக ஒரு நல்ல சிறு கதை படித்த அனுபவம் கிடைக்கும்.
VOUS LISEZ
கதை விமர்சனம்
Aléatoireநான் படித்த எனக்கு பிடித்த கதைகள் பற்றிய விமர்சனம் (குறித்த ஆசிரியர்களின் அனுமதி பெற்று எழுதப்பட்டது)