~16~

131 10 2
                                    

நீண்ட நேரமாகியும் ரத்தினத்திடமிருந்து செய்தி வராதுபோகவே பதற்றத்தில் ஒவ்வொரு விரலிலும் பாதி நகத்தை கடித்துத் துப்பி விட்டான் சிவத்திரன்.

'ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் பிசகாமல் செய்துமுடித்தோம். கடைசியில் இப்படி நிகழ்ந்து விட்டதே'

நல்லவேளை முழு நகத்தையும் கடித்து துப்புவதற்குள் ரத்தினமே அழைத்தார்.

"பை அங்கே கிடந்திச்சா? எடுத்துட்டிங்களா? உள்ளே எல்லாம் பத்திரமா இருக்குல்ல?" ரத்தினத்துக்கு பதில்பேச இடம்தராமல் சிவத்திரன் தன்பாட்டில் கேட்டுக்கொண்டிருக்க

மறுபக்கம் ரத்தினம்
"அ.. அ.. அது.. வந்..து" திக்கித் திணறினார்.

"நிலமை புரியாம வந்து போயின்னு இழுத்திட்டிருக்கிங்க? எடுத்திங்களா? இல்லையா? தெளிவாக சொல்லுங்க" சீறினான் சிவத்திரன்.

"தோள்பை எறிஞ்ச இடத்துலதான் கிடந்தது. ஆனால்.. உள்ள எதுவுமேயில்ல. நான் போறதுக்குள்ள யாரோ எடுத்துட்டாங்க" அச்சத்துடனே மெல்ல கூறிமுடித்தார்.

சிவத்திரனுக்கு வந்த ஆத்திரத்தில் வாயில் வந்ததையெல்லாம் சொல்லி திட்டித் தீர்த்தான். முடிக்கும் வரையும் குறுக்கிடாமல் வாங்கிக்கொண்டு

"இப்போ என்னடா தம்பி செய்யிறது?"

சிவத்திரனோ நக்கலாக
"என்ன செய்யிறதா? போய் போலீஸ்ல கம்ப்ளைன் குடுங்க. தேடித்தருவாங்க"

"அண்ணன் ஏதோ அவசரத்துல தப்பு பண்ணிட்டன்டா. அதுக்காக நீயே இப்படி பேசலாமா?" ரத்தினம் கேட்கையில் சிவத்திரனுக்கே கொஞ்சம் பாவமாக இருந்தது.

"ஒருவேளை பொருளுக்கோ, பணத்துக்கோ ஆசைப்பட்டு எடுத்திருந்தா நமக்கு பிரச்சனையில்ல. ஆனா தொலைச்சவங்க கிட்ட ஒப்படைக்கனுங்கிற நோக்கத்துல எடுத்திருந்து அதை போலிஸ்ல ஒப்படைச்சிட்டா நம்ம கதையே முடிஞ்சிரும்"

ரத்தினம் அச்சமிகுதியில் பேச்சற்றிருக்க

"பயப்படாதிங்க. தொலைச்சவங்க கிட்ட பொருளை குடுக்கனும்னு நினைக்கிற அளவுக்கு இங்க யாரும் நல்லவனில்ல. ஒன்னு கிடைச்சவரை லாபம்னு அவனே வச்சிக்குவான். அப்படியில்லையா வித்து காசாக்கிக்குவான். இதுதான் நடக்கும். பார்த்துக்கலாம் விடுங்க" கோபம் தனிந்த சிவத்திரனின் மூளை தெளிவாக சிந்தித்து நிலமையை எதிர்கொள்ள துணிந்தது.

என் பாதையில் உன் கால் தடம் Dove le storie prendono vita. Scoprilo ora