அவள்

136 13 32
                                    

அவள்,
கண்ணீரை மறைத்து
கதை கூறுவாள்
காணாத உன் மனவலியை
கண்டு கொள்வாள்
கடிந்து பேசினால்
கசிந்தே போவாள்
கணிந்து பேசினாலோ
கவர்ந்து போவாள்

எதிர்பார்ப்பின்றி உழைப்பவள்
உன்னில் எதிர்பார்ப்பது
சிறு மரியாதையே

சுயகௌரவம் இருந்தும்
சுயநலம் பாராதவள்
சுறுசுறுப்பான விழிகளுடன்
சுற்றும் தேவதை அவள்

தாயாய் தாரமாய் தங்கையாய் தோழியாய்
தரனியிலே பல பெயர் கொண்டு
தள்ளாடும் வயதில் கூட
தாதியாய் மாற வள்ளவள்

நம்மை கருவில் சுமப்பவளும்
நம் கனவை சுமப்பவளும்
நம்மை கண்ணாய் காப்பவளும்
நம் கண்ணீரை துடைப்பவளும்- அவள்

உலக விருட்சகத்தின் வேராய்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உரமாய்
உதிக்கும் சூரியனின் முதல் கீற்றாய்
உலகின் விலை மதிப்பில்லா இரத்தினமாய்
உறவுகளின் திறப்பாய்- இருப்பாள் அவள்

உன் உடல் வலிமையால்
வீழ்த்த நினைத்தாலும்
உள வலிமையால் உனை
வீழ்த்திக் கூடியவள்
அடக்க நினைத்தால்
அடர்ந்து வளரும் காடு அவள்
அழிக்க நினைத்தால்
அக்கினி சுடராய் எழுவாள் அவள்

அடிமை என நீ நினைத்தாலும் - தன்
அடைவை அடையுமட்டும்
அமைதியாய் போராடுவாள்
அழகான புன்னகையை
அணிந்து கொண்டு...
ஆயிரம் வலிகள் தான் வந்தாலும்
அடக்கி கொண்டு
அகிலத்தை ஆழ்வாள்
அவள் - பெண்!!

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Jul 05, 2021 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

அவள்Donde viven las historias. Descúbrelo ahora