" மிஸ்டர் ரகுநாதன்...... நீங்க காலேஜுக்கு நிறைய டோனேஷன்
கொடுத்திருகீங்க..... எந்த ஒரு பேரண்ஸும் இந்த அளவுக்கு செஞ்சது இல்ல.... அதைத்தான் சார்.... நானும் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்....!" என்றார் புரபசர் ஆத்மா திகில் கலந்த பார்வையுடன்.....
ப்ளீஸ் ......சார்.... ப்ளீஸ்... இந்த தடவை மட்டும்..... ப்ளீஸ்!" கலக்கத்துடன் வார்த்தைகளை மென்று விழுங்கினார்.
"மிஸ்டர் ரகுநாதன் உங்க மகள் மஞ்சனா....... இப்ப நடந்துக்குற முறை கொஞ்சம் கூட சரியில்லை...... இரண்டு மூன்று வாரத்துக்கு முன்னாடி என்ன செஞ்சிருக்காள்'ன்னா....." அவர் தனது மூக்கு கண்ணாடியை கலற்றிவிட்டு.......கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டு மேலும் தொடர்ந்தார்.
நாங்கள்.....' எக்ஸ்பிரிமண்ட்டுக்காக கொண்டு வந்த 'ரியல் பாடி' இருக்குற இடத்துலப் போயி இருபது காசு 'கொயண்ஸ' வச்சி....., 'நீ யார்... எப்படி பிணமாண....? இது இயற்கை சாவா.....?தற்கொலை .? கொலையா...?! பிணத்துக் கூட ஆவி அழைக்கிற..., விளையாட்டு விளையாடி இருக்கா'ள்......!
அந்த சமயம்.... அங்கே ரவுண்ஸ்சுக்கு வந்த.., வாட்ச் மேன் அதைப் பார்த்து, பயந்து.... கத்த..., அங்கிருந்து தப்பிச்சு போய்ட்டாள்....! இந்த காட்ச்சி எல்லாம்..... காலேஜ்ல அங்க இங்க ரகசியமா பதிச்சு வச்சிருக்கிற கேமராவுல ரெக்கார்டா ஆகியிருக்கு. இது 'டீன்' னுக்குத் தெரியும். ஆனால், அதை மன்னித்துவிடச் சொல்லிட்டாரு......!'
புரபஸர் ஆத்மா.....' டீன்' மிஸ்டர் சிவராம்..... இதைப் பத்தி
ஏற்கணவே இதைப் பத்தி எங்கிட்ட 'இன்பார்ம்' பண்ணியிருக்காரு....!" என்றார் ரகுநாதன். அது இப்ப பிரச்சண இல்ல சார்....... இந்த தடவை இன்னும் இரண்டு பெண்களை அழைச்சிகிட்டு...., ஆவி அழைச்சிருக்காள்......!" என்னசார்.....சொல்றீங்க....?...!" ரகு நாதனின் வார்த்தை தடுமாறியது.
'ஆமாங்க....மிஸ்டர்...ரகுநாதன்..... நீங்க என்னுடைய நல்ல நண்பர்கள்'ல ஒருத்தர். அதனாலதான் உங்ககிட்ட நான் உங்க மகள்.... மஞ்சனாவைப் பற்றி தைரியமாகச் சோல்கிறேன். நீங்க எவ்வளவு அக்கரை மஞ்சனா மீது வைத்திருக்கீங்களோ.....அந்த அளவுக்கு நானும் வைத்திருக்கிறேன் ..... மிஸ்டர் ரகுநாதன்......" புரபசர் ஆத்மாவின் குரலில் இறுக்கம் தணிந்து பணிவு வெளிப்பட்டது.