அவரையறியாமல்.....அந்த இடத்தில் அவரது கார் நின்றது. மெதுவாக இறங்கினார். அந்த இடத்தில் இருந்து ஒரு இலையை கையில் எடுத்துப் பார்த்தார். பிறகு அதனை எடுத்து.., தன் பாக்கெட்டினுள்..., போட்டுக் கொண்டு தனது காரை நோக்கிப் பயனமானார்.ரகுநாதனின் எண்ணம் இம்முறை ஏனோ அழைக்களிக்கப் பட்டிருந்தது.
தனது அண்ணன் வீட்டுக்குப் போகாமல்....காரை u-turn பண்ணினார். ஆனால் அந்த power steering தண்னிச்சையாக மூன்று முறை சுற்றி சுற்றித் தானாகவேப் போய்..... அந்தக் கொட்டகையில் .... மோதி நின்றது. சிகப்பு வண்ணச் சாயம் கொண்ட அந்தக் கொட்டகையில் ஒரு சில சீன எழுத்துக்கள். அதை உணர முடிந்ததே தவிர, வாசிக்க முடியவில்லை.
அவரது கண்கள் பார்வையை இழந்து..., ஒரு நிமிடம் இருட்டாகிப் போனது. தலை 'கிர்' எனச் சுற்றி..,அப்படியே streering மேலே வீழ்ந்தார். அப்போது அவரது செல்போண் சிணுங்கியது. ரகுநாதனின் மயக்கம் இலேசாக தெளிந்தது. அவரது கைகள் தானாக.....தனது iphone எடுத்தது. அதில் screen ஒரு கலவையாண உருவம் கலங்கிபடி தென்பட்டது...., அது ஒரு பெண்னின் முகம் போல் இருந்தது. கண்களை கசக்கி நன்றாகப் பார்த்தார்.
ஆனாலும் அந்த உருவத்தின் நிழல் ..., மீண்டும் நிழலாடி விட்டு மறைந்துப் போனது. ஒரு வேளை battery weak காக இருக்குமோ...., அவர் நன்கு ஆராய்ந்தார்.அந்த சமயம் அவரது, காரை யாரோ பலமாக உலுக்குவதுப் போல், இருந்தது. நில நடுக்கமா....?? ரகுநாதன் காரை விட்டிறங்கினார். ஒரு கல் தடுக்கி...., கீழே தடுமாறி நிலைக்குலைந்து வீழ்ந்தார். மண்டையில் அடிப்பட்டு..., இரத்தம் கொட்ட மயங்கி விழுந்தார்.
அந்த சமயம்தான் அந்த அதிசயம் நடந்தது. அவர் பாக்கெட்டில் இருந்த இலை தானாக பறந்து வந்து..., அவரது தலையில் உள்ள இரத்தத்தை தானாக உறிஞ்சியது. பிறகு அங்கும் இங்குமாகப் பறந்து திரிந்தது. பிறகு அவரது காரின் பிண் சீட்டு இருக்கைக் கடியில் சென்று எங்கோ மரைத்துக் கொண்டது.கண் விழித்துப் பார்க்கையில் ...., Penang medical central .....i.c.u. வார்டில் வயர்கள் சூழக் காணப்பட்டார். எதிரே தெறிந்த மாணிட்டரில் அவரின் இதயம் சீராக இயங்க ஆரம்பித்ததைக் கண்டு, அவரது பிரத்யோக நர்ஸ் டாக்டரை அழைத்தாள்.