மருத்துவ மணை வளாகத்தில் .... காரைப் பார்கிங் செய்துவிட்டு... அனைவரும் லிப்டில் ஏறி அப்பாவைப் பார்க்க இருந்த வார்டுக்குள் நுளைந்தனர்....ஆனால் அங்கே....யாருமில்லை...! அணைவரும் அதிர்ச்சியடைந்தனர். சக்தி அம்மாவின் செல்லுக்கு தொடர்புக் கொண்டாள். " ஹலோ.....அம்மா... நீங்க எங்க இருக்கீங்க...." சக்தியின் முகம் புன்னகை பூத்தது.
அப்பா நார்மலுக்கு வந்து விட்டாராம்... இப்ப ரெஸ்ட் எடுக்க இன்னொரு அறைக்கு மாத்திட்டாங்களாம்..... புரபசர் ஆத்மா கிளம்பிட்டாராம். சரி வாங்க அப்பாவப் பார்க்க போகலாம்...." சக்தி துரிதப் படுத்தினாள். அங்கே அப்பா தனது நண்பர்களுடன் முகம் மலர, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அம்மா முகம் மலர ஆரஞ்சுச் சாரு பிழிந்துக் கொண்டிருந்தார். அட வாங்கம்மா....டியர் ப்ரண்ஸ் மீட் மை டாட்டர்ஸ்...மஞ்சனா.... , சூர்யா சக்தி...இது மஞ்சனா ப்ரண்ட் ப்ரியா...., என் பெண்கள் மூனுப் பேரும் சரியாண கெட்டிக் காரிகள். மஞ்சனா டாக்டருக்கு படிக்கிறாள். சூர்யா என் ஆபிஸ் நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறாள்.....கார் ரேசிங்ல சூப்பர். சக்தி s.t.p.m படிக்கிறாள்... கோல்ப் விளையாடுவதில் கெட்டி..." ரகுநாதனுக்கு தன் பிள்ளைகள் பற்றி பெருமையாக பேசுவதில் ரொம்ப பெருமை புதுப் பணக்காரர் அல்லவா...?
அப்போது மஞ்சனா....அந்தக் கண்ணாடி அறையில் அனைவரது பிம்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது புதிதாய் மேலும் ஒரு பிம்பம் தோன்றியது.அந்த பிம்பம் ரகுநாதனையே உற்று நோக்கியது. மஞ்சன அ கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தாள். அந்த புதிய பிம்பம் மறைந்து விட்டிருந்தது. மஞ்சனாவின் காதில் யாரொ....ரகஷியமாக...." மஞ்சனா உஷ் பேசாதே....." என்றுக் கூறுவதுப் போல் இருந்தது. அப்போதே மஞ்சனாவின் மனதில் அந்த பிம்பத்தின் மீதுள்ள எண்ணம் மறைந்து விட்டது. அவள் அந்த நிழலைப் பற்றி எந்த ஒரு சலணமும் இல்லாமல் இருந்தாள்.
"சரிமா.... நீங்க எல்லோரும் அம்மாவை அழைச்சிட்டு வீட்டுக்குப் போங்க நான் நாளைக்கு டிஸ்சார்ச் பண்ணிகிட்டு..., வந்திடறேன்.....!" என்றார். இல்லப்பா....., உங்க்கூட இங்க தங்கிட்டு..., நாளைக்கு வர்றேன்..., அம்மாவும் தங்கச்சிங்களும்... வீட்டுக்கு போகட்டும்...!" மஞ்சனா தனது தந்தை ரகுநாதன் கைகளைப் பிடித்துக் கொண்டு வாஞ்சையாக கேட்டாள்.