ரிஷி வர்மனின் திடீர் கல்யாண முடிவை கேட்டு அதிர்ந்த ஆதிரனோ அன்றைய தினமே ரிஷியுடன் தொடர்பு கொள்ள அவனோ ஆதிரனின் அழைப்புக்கள் அணைத்தையும் ரத்து செய்தான்.இதன் காரணமாக அடுத்த நாளே வேளைகளை விட்டு விட்டு ரிஷியினை தேடி ஓடி வந்தான் ஆதிரன்.
வீட்டில் நுழைந்தவன் எதிர்ப்பட்ட அவனின் அன்னை சுசிலாவிடம் கூட பேசாமல் ரிஷியின் அறைக் கதவை சென்று தட்டினான். மனதில் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல் தனது அறையில் அமர்ந்து ஆஃபிஸ் வேலைகளை செய்து கொண்டு இருந்தான் ரிஷி வர்மன்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்த ரிஷி திகைத்து நின்றான்.மறு நிமிடமே எதுவும் நடக்காததை போன்று
"வாடா ஆதி என்னடா இது சொல்லாம கொள்ளலாம வந்து இருக்க .... என்னடா விஷயம்?"
என வினவ கோபத்தின் உச்சிக்கே சென்றான் ஆதிரன்.
"ஆமா... ஆமா... சார் இப்ப பெரிய ஆள் ஆகிட்டீங்க... லவ் பண்ணி இருக்கீங்க என் கிட்ட கூட சொல்லாம.... அதுவும் இன்னும் ஒன் வீக்ல கல்யாணம் வேற... அதான் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு போகலாம்னு வந்தேன்" என ஆதிரன் கூறியதைக் கேட்டு அலட்டி கொள்ளாமல்,
"சரிடா அதான் நான் சொல்லாமலே கல்யாணத்துக்கு வந்துட்ட இல்ல..சரி அப்படியே இன்னும் ஒன் வீக் தானே கல்யாணம் முடிஞ்ச அப்றமே ஊருக்கு போ..."
எனக் கூறி கொண்டிருக்கும் போது
"ஹாய் டார்லிங்..யாரு இது உங்க தம்பியா? அவரும் ஹான்ட்ஸம்மா தான் இருக்காரு" என்றவாறு அங்கு வந்தாள் ஐஸ்வர்யா.
"ஆமா இவன் பேர் ஆதிரன், என்னோட சித்தப்பா பையன்" என அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான்.
அவளோ அவனைப் பார்த்து சிரித்து வைக்க ஆதிரனோ கண்டு கொள்ளாமல் கோவமாக அங்கிருந்து சென்றான்.
ஐஸ்வர்யா ரிஷியை திரும்பி பார்க்க அவனோ "விடு அவங்க எல்லாரும் கொஞ்சம் கோவமா இருக்காங்க.... கல்யாணத்துக்கு அப்றம் சரியாகிருவாங்க.." என அவளை சமாதானம் செய்தான்.
YOU ARE READING
எனக்கென பிறந்தவன் நீ
Romanceஅக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...