ஆராதனா கர்ப்பம் என்ற விடயமும் ,அவள் ஊட்டிச் சென்ற விடயமும் அகல்யாவிற்கு ஒன்றாகவே தெரிய வந்தது.... அக்காவை குழந்தை உண்டான நேரத்தில் நன்றாகபார்த்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து ஆதிரனை அழைத்துக் கொண்டு அகல்யாவும் ஊட்டிக்கு பயணமானாள்...
ரிஷி ஊட்டி வந்து சேர இரவானது. அவன் வீடு வந்த நேரம் அனைவரும் இரவு உணவு உண்டு விட்டு அவரவர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்... யாரையும் தொந்தரவு செய்யாது விருந்தினர் அறையில் சென்று அவனும் உறங்கினான்.. காலை அனைவரும் எழுந்து ஒவ்வொரு வேலையாகச் செய்ய அப்போதுதான் எழுந்து வந்தான்..
அவனை கண்ட தாத்தா அவனை கலாய்க்கும் விதமாக " என்னடா பேராண்டி... பொண்டாட்டிய பார்க்காமல் இருக்க முடியலையா? இப்படி அடுத்த நாளே இங்க ஓடி வந்துட்டே...."என்று கேலி செய்ய அவரைப் பார்த்து " அப்படி எல்லாம் இல்ல தாத்தா... என்னோட குழந்தையை பார்க்க வந்தேன். என்று சொல்லி விட்டு நிமிட அங்கே இவனையே கவலையோடு பார்த்தவாறு இருந்தாள் ஆராதனா..
அவளது பார்வை அவனை ஏதோ செய்ய முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான் ரிஷி.. அங்கு வந்த வள்ளி பாட்டி தாத்தாவிடம் சென்று மெல்லிய குரலில் "என்னங்க இது சின்ன புள்ளைங்க பேசட்டும்... நீங்க இங்க இருந்து வாங்க... இடையில பேசாம... போகலாம் வாங்க.."என தாத்தாவை அப்புறப்படுத்தினார்..
தாத்தா பாட்டி இருவரும் அங்கிருந்து சென்றதும் சோபாவில் இருந்து எழுந்து ஆராதனா அருகில் வந்தவன் அவளை பார்த்து
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... என்னோட குழந்தையை நல்லபடியாக பெத்துக்த்ன கொடு என் கையில... அது போதும் எனக்கு..." என்று அவன் கூற மேலும் மேலும் மனம் நொந்து போனாள் பாவையவள்...
கணவன் குழந்தை உண்டான விடயம் தெரிந்தால் எப்படி எல்லாம் தன்னை கொண்டாட வேண்டுமென நினைத்தாலோ அவை அனைத்தும் கனவாகவே போனது அவளுக்கு ... எந்த பெண்ணுக்குத் தான் இந்த நிலையில் கணவன் தன்னை கொண்டாட வேண்டும் என்ற ஏக்கம் இருக்காது...பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள் ஆராதனா.
ESTÁS LEYENDO
எனக்கென பிறந்தவன் நீ
Romanceஅக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...