மருத்துவமணையில்....
தனம்: டாக்டர் கொடி எப்படி இருக்கா
டாக்டர்: அவங்க கை நரம்பு கிட்ட கட் பண்ணி இருக்காங்க. நிறைய இரத்தம் போய் இருக்கு இப்போது எது சொல்ல முடியாது.
அனைவரும் கவலையுடன் அமர்ந்து இருக்க.
உள்ளே கொடியின் அருகில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தால் முல்லை.
24 மணி நேரத்திற்கு பிறகு கண்விழித்தால் கொடி. தன் அருகில் இருக்கும் முல்லையை பார்த்து
கொடி: முல்ல இப்பயாவது நா சொல்றத கேளு
முலலை: கொடி நீ ஏன் இப்படி பண்ண
கொடி: உன் காதலுக்காக
முல்லை: நீ சொன்னத நா ஏத்துகிட்டாலும். என் மாமா எப்படி ஏத்துப்பாரு.
கொடி: அதுக்கு நீ அவர் முன்னாடி போகணும்.
முல்லை: என்ன சொல்ற
கொடி: இப்போ நா உன் மாமன கூப்பிடுறேன்
நீ எல்லாதையும் அவர்ட சொல்லி அவர உன்ன ஏத்துக்க வை
முல்லை: இது சரி வராது
கொடி: முல்லை நீ இப்படி அடம் பிடிச்சா நீ நெனச்சதும் நடக்காம நா நெனைச்சதும் நடக்காம. யாருக்கும் பயன் இல்லாம எல்லாம் வீணா போகும்.
முல்லை அரை மனதுடன் சம்மதிக்க...
கொடி நர்ஸிடம் சொல்லி கதிரை உள்ளே அழைக்க...
கதிர் உள்ளே வந்து எதுவும் பேசாமல் நிற்க..
கொடி: உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல.
கதிர்: மௌனமாக இருக்க
கொடி: முல்ல உங்க முன்னாடி வந்தா சந்தோஷ படுவீங்களா.
கதிர்: இது என்ன கேள்வி. அவன் என் உயிர் எப்படி சந்தோஷ படாம இருப்பேன்.
ஆனா அது எப்படி நடக்கும் அவ அவ தான் என்ன விட்டு போய்டாலே.
கொடி: வருவா
சிறிது அமைதிக்கு பின்
முதன் முறை தன் காதலன் தன் மாமன் முன் தோன்ற தயாரானால் முல்லை.
YOU ARE READING
முல்லைகொடியாள்
Viễn tưởngசித்து நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு நிறைவடையபோகிறது.... சித்து இந்த உலகை விட்டு சென்றாலும் நம்மை விட்டு விலகவில்லை... சித்து மீண்டும் வந்தாள் ஒரு கற்பனை...