கதிரவனின் ஒளி

372 58 8
                                    

காலை உறங்கி கொண்டிருக்கும் கதிரின் அருகில் அமர்ந்து கொண்டு அவன் உறங்குவதை ரசித்து கொண்டிருந்தால் முல்லை.

உறக்கத்தில் இருந்து விழித்த கதிர் அவன் அறையில் மாட்டி இருக்கும் முல்லையின் புகைப்படத்தில் கண்விழித்து அன்றைய நாளை தொடங்கினான்.

வழக்கம் போல குளித்து விட்டு கண்ணாடி முன் நின்று நெற்றியில் விபூதி இட்டு விட்டு கட்டிலின் அமர்ந்தான்.

அங்கு கையில் டீயும் வந்த முல்லை

மு: மாமா டீ குடி

க: ஏய் முட்ட கண்ணி நீ எப்ப வந்த

மு: காலையில் தான் ஹாஸ்டலில் இருந்து வந்தே மாமா. வந்த உடனே உன்ன பாக்க வந்துடேன் மாமா.

க: அடியேய் ஒன்னு கேக்கவா

மு: என்ன மாமா கேளு

க: என்ன எப்ப டி கட்டிக போற

மு: இவ்வளவு தானா. இதோ கட்டிகிட்டா போச்சு

என்று கதிரை இருக கட்டி அணைத்தால்
இதை எதிர் பாராத கதிர்

க: ஏன் முல்ல பூவே நான் இத சொல்லலா மாமா கையால தாழி எப்ப கட்டிக போறனு கேட்டேன்.

வெட்கத்துடன் சட்டென்று எழுந்த முல்லை அங்கிருந்து செல்ல முயல அவள் கை பிடித்து இழுத்தான் கதிர்

க: பதில் சொல்லுடி

மு: நீ எப்ப கட்டினாலும் கட்டிகிறேன் மாமா

அவளின் பதிலில் தன்னை மறந்து தன் காதலை வெளிப்படுத்த என்னி அவளை இருக அனைத்து அவள் கன்னத்தில் முத்தத்தை பதித்தான் கதிர்.

சட்டென உணர்ந்தான் அது தன் பிரம்மை என்று. தன் முல்லையை எண்ணிக் கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தவனை அங்கு கூடத்தில் அமர்ந்து இருந்த அவன் குடும்பத்தினர் வருத்ததுடன் பார்த்தனர்.

மூ: கதிரு

க: சொல்லுங்க அண்ணா

மூ: இன்னும் எவ்வளவு நாள் டா இப்படி இருப்பா

க: என் முல்லை என்னிடம் வர வரைக்கும்

தனம்: அவ வர மாட்டாடா

க: அண்ணி அப்படி சொல்லாதீங்க

த: வேற எப்படி டா சொல்ல சொல்ற
வராத ஒருத்திகாக நீ உன் வாழ்க்கைய அழிச்சுகிற டா

க: அவ வருவா அண்ணி

முல்லை: நா இங்க தான் இருக்கேன் மாமா

தனம்: செத்துப்போனவ எப்படி டா வருவா

கதிர் : அண்ணி என் முல்லை சாகல

தன்ம் : டேய் உன் முன்னாடி தானா அவளுக்கு எல்லா இறுதி காரியமும் பண்ணுனோம்.

கதிர் : இல்ல என்னால இத ஏத்துக முடியாது

என்று சொல்லி அங்கிருந்து தான் அறைக்கு வேகமாக சென்றான் கதிர்.
கண்ணீருடன் நிற்கும் தன் மாமானை இரு கட்டி அணைத்தால் முல்லை. ஆனால் அவளின் தொடுதலை கதிரால் உணர முடியவில்லை.

தான் ஒருத்தி இருப்பது தன் மாமானுக்கு தெரியவில்லையே என நொந்து கொண்டாள் முல்லை.

இறந்தாலும் தன் மாமனை விட்டு பிரிய முடியாமல். அவனது வாழ்க்கையை சரி செய்ய இந்த பூமியில் உடல் இன்றி வெறும் ஆன்மாவோடு மட்டும் சுற்றி கொண்டிருக்கிறாள் முல்லை.

தன் மாமனின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த இந்த பூ உலகில் பூவின் வாசமென கதிரை சுற்றி வாசம் வீசுகிறாள் இந்த வசந்தமுல்லை.

முல்லை என்ற பெயரும் அந்த அழகிய முகமும் அவன் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது.

அது இரண்டை தவறி தன் வாழ்க்கையில் வேறு யாருக்கும் இடம் இல்லை என உறுதி கொண்டான் கதிர்வேலன்.

தன் கதிரவனின் ஒளி தன்னை தவிர வேறு யாரிடமும் படக்கூடாது என எண்ணியவாள் இன்று அவன் வாழ்க்கை மகிழ்ச்சிக்காக வேறு ஒரு பூவின் மீது தன்னவனின் ஒளி பட வேண்டும் என்ற உறுதி கொண்டு இந்த பூமியில் சுற்றி கொண்டு இருக்கிறாள்.

வாழ்க்கை முழுவதும் தன் முல்லையை எண்ணி கொண்டு வாழ்வானா கதிர்.
தன் கதிரவனின் ஒளியை வேறு பூவிடம் ஒளிர வைப்பாளா முல்லை பொறுத்திருந்து பாப்போம்.

விரைவில் கதிரின் மீது படரும் இந்த 'முல்லைக்கொடியாள்'.

இது ஒரு சிறு கதை 5 அல்லது 6 பகுதி வரும்.

என்னால் முல்லையை ஆவியாக கற்பனை செய்ய இயலாது அதானால் அவளை வானிற்று இறங்கி வந்த கதிரின் தேவதையாக எண்ணி இந்த சிறு கதை.

நன்றி🙏🙏🙏🙏

முல்லைகொடியாள்Where stories live. Discover now