லக்ஷ்மி அம்மாவிடம் வந்த வேலுவும் பழனியும் தங்கள் திட்டப் படி காய் நகர்த்த ஆரம்பித்தனர்
வேலு: அம்மா தங்கச்சி என்னம்மா முடிவு பண்ணி இருக்க .
லக்ஷ்மி அம்மா: எதப்பத்தி அண்ணா கேட்கரீங்க .
பழனி: வேற எத பத்தி மா எல்லாம் உம் பையன் கல்யாணத்த பத்தி தான் வேலு கேக்கறான்.
லக்ஷ்மி அம்மா :ஹோ அது வா அதுல முடிவு பண்ண என்னணா இருக்கு என் பையனுக்கு எல்லா வகைலயும் பொருத்தமான பொண்ணா இந்த குடும்பத்துக்கு ஏத்தவளா தேடி எடுக்கனும் அண்ணா அது சாதாரண வேலை இல்ல ஏன்னா என் பையனுக்கு அமைர பொண்ணு தான் எனக்கப்பரம் இந்த குடும்பத்துக்கு எல்லாமாவும் இருக்க போரவ அதனால அந்த விஷயத்தில் நான் ரொம்ப கவனமா இருக்கனும் .
வேலு: ஹம் அது சரி மா பொண்ணு பாக்கர வேலைய தொடங்கிட்டியா
லக்ஷ்மி அம்மா: இல்லண்ணா முக்கியமானவங்க நிறையபேர் கிட்ட சொல்லிர்கேன் நானும் பார்துட்டு தான் இருக்கேன் அண்ணா ஆனால் மறந்தும் நீங்களும் பாருங்கள் என கூறவில்லை ஏனே லக்ஷ்மி அம்மாவிட்கு அப்படி இவர்களிடம் சொல்ல தோன்றவில்லை
லக்ஷ்மி அம்மா அவ்வாறு கூறியதும் வேலுவும் பழனியும் என்ன இவள் நம்மிட பார்க்க சொல்லவில்லையே என யோசிக்க பின் வேலு தொடர்ந்தான்வேலு: ஆமா மா நீ சொல்ரதும் உண்மை தான் உங்க வீட்டுக்கு ஒரு மருமகள தேடுரதுன்னா சாதாரண விஷயமா நம்ம குடும்பத்துலயே நல்ல பொண்ணுங்க இருக்காங்க .நல்ல படிச்ச அழகான பொண்ணுங்க கூட இருக்காங்க. ஆனா இது எல்லாம் இருந்தாலும் உங்க குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம் இருக்குல அதுக்கு ஏத்த மாரி நல்ல வசதியான பெரிய இடங்கள்ல தானே பொண்ணு எடுத்தா சரி பட்டு வரும்
ஆனா நம்ம குடும்பத்துலயே பொண்ணெடுத்தா நம்ம கிருஷ்ணன் ஆத்மா கூட சந்தோஷ படும் நம்ம அதுக்காக மட்டும் பர்க்க முடியாதே கிருஷ்ணன் ஆத்மாவ சந்தோஷ படுத்தரத விட பையனுக்கு நல்ல வசதியான எடுத்துல பொண்ணெடுத்தா தானே இந்த குடும்பத்துக்கு கவுரவமா இருக்கும்
என பூடகமாக வேலு பேச லக்ஷ்மி அம்மா வின் முகம் யோசனையால் சுருங்கியது இதை கவனித் பழனி வேலுவுக்கு கண் காட்ட வேலு மீண்டும் தொடர்ந்தான்
வேலு: பையனுக்கு கல்யாணம் பேசுரதா கேள்விபட்டதும் நாங்க இங்க வந்ததுக்கு காரணமே கிருஷ்ணன் இல்லாட்டியும் நம்ம குடும்பத்துக்கும் உங்களுக்கும் இருக்க உறவின்னும் அப்படியே தானேமா இருக்கு .நாங்க தானே எதுவா இருந்தாலும் நல்லா விசாரிச்சு பாத்து பேசி முடிக்கனும் நீயும் தனிமனிஷியா உன்னால எப்படி பொண்ணு வீடு பத்தி எல்லாம் விசாரிக்க முடியும் அத மனசுல வச்சிகிட்டு தான் மா நாங்க இங்க வந்தோம் ஆனா என்ன நீ தான் பொண்ணு பார்கரத பத்தி ஒரு வாரத்த எங்க கிட்ட சொல்லல அதன் சங்கடமா இருக்கு நீங்க வசதியான இடம் உங்க தகுதிக்கு வசதியா நீங்க தேடுவிங்க நாங்க சாதாரண பட்டிக் காட்டானுங்க
நாங்க என்னத்த பாக்க போரோம் அப்படின்னு நீ நினைக்கிறது தப்பில்லமா இருந்தாலும் என்ன பண்ண மனசு கேக்கல அதான் உனக்கு உதவியா இரண்டு நாள் இருந்துட்டு ஊர பாத்ணு போயடரோம் மா என்க
YOU ARE READING
காதல் இதயம் ❤
Romancehi❗ hello❗ i am Anshanno💖 இது என்னுடைய முதல் பதிப்பு ❤ ரெம்ப நாளா எனக்கு இங்க என்னுடைய கற்பனைகள பகிரனும்னு ரெம்ப ஆசை இன்னக்கி என்ன ஆனாலும் பரவால்ல நாமலும் எழுதிரலாம்னு start பன்னீட்டன் பா ஆனா நா என்ன எழுதினாலும் நம்ம சகோஸ் உங்கலோட ஆதரவு இல்லாம...