இதயம்💖 2

3 1 2
                                    

ஆகாஷ் அவன் கனவில் கண்ட பெண்னை அப்படியே தத்ரூபமாக வரைந்து முடித்தான்  அதில் ஓர் நுனியில் அந்த திகதியையும் அவன் கை ஒப்பத்தையும் போட்டான்
பின் அந்த படத்தை வருடியவன் 
ஆகாஷ்: உன்னழக வெறும் பென்சில்லயோ இல்ல பெய்ன்டிங்லயோ வெளிப்படுத்திட முடியாது ஏன்னா உன்னோட அழகுங்கரது வெறுமனே உன் தோற்றத்தில் இல்ல அது
உன் துடிப்பு மிகுந்த பார்வையில் உனர்வுகளுக்கு ஏற்ப அசையிர புருவங்கள்ள ஓசை இல்லா இரு வரி கவிதை போன்ற  ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க அந்த உதடுகள்
பயந்து பட படத்த அடர்ந்த வனம் போன்ற  இமைகள்
நீண்ட கழுத்துக்குள்ள நீ எச்சில் விழுங்கும் போது நடுக்கழுத்தில் உண்டாகும் சிரிய பல்லம்
நீ சுவாசிக்கும் போது கோபுரங்கள் இரண்டு காற்றில் மிதப்பது போல்  இருக்கும் அத்தனை அழகு இன்னும் சொல்லிட்டே போலாம்  என கூறி வெளியே ஏதோ அரவம் கேட்க அந்த வரைதல் புத்தகத்தை அப்படியே அவனது லேப்டாப் பைக்குள் பத்திரப் படுத்தினான்

அவனது அறைக்குள் நுழைந்தான் சந்தோஷ்
சந்தோஷ்: ஹாய் ஆகாஷ்
ஆகாஷ்: ஹாய் டா என்ன இந்த நேரத்துல காலைல தானடா நாம வீட்ல மீட் பண்னோம் எனி ப்ராப்லம்
சந்தோஷ்:  நோ மச்சி ப்ராப்லம் எனக்கில்ல உனக்கு தான்
ஆகாஷ்: எனக்கா எனக்கென்ன ப்ராப்லம் டா ஐ ஏம் ஆல் ரைட் டா.
சந்தோஷ்: அதில்ல டா அம்மா காலைல சொன்னத மறந்துடியா
உனக்கு பொண்ணு பாக்க போராங்கலாமே  உனக்கு தான்  அந்த இன்சிடன்கு அப்பரம் இந்த காதல், கல்யாணம்னா பிடிக்காதே அதா நீ இங்க டென்ஷனா இருப்பியோன்னு வந்தன் டா
ஆகாஷ்: கூலாக ஹோ....அதுவா...
அப்டிலாம் ஒன்னும் இல்லடா அம்மாவும் எத்தன நாள் தான் இந்த விஷயத்த பத்தி கவலை பட்டுட்டு இருப்பாங்க என்னால முடிஞ்ச வர அவங்கள சந்தோஷமா வெச்சிகனும் டா .அது மட்டும் இல்ல நா எப்பயோ அந்த விஷயத்தை ப்ளஷ்  அவுட் பன்னிட்டேன் டா
சந்தோஷ்:  என்ன மச்சி ஒரு டைப்பா பேசர உன் முகமே சரியில்லயே பார்க ஒரு மார்கமா இருக்க நேத்து வர அந்த இன்சிடன்குள்ள இருந்து வெளியவே வராதவன் இன்னக்கி எப்படி டா ஒரே நாள்ல டோடலா மாறுன
ஆகாஷ்: அதெல்லாம் ஒன்னும் இல்ல டா இப்போ தானே அம்மாக்கு ஓக்கே சொல்லிருக்கேன் இனி பொண்ணு  தேடவே ஒரு வருஷமாகும்
சந்தோஷ்: டேய் நீ அப்படி நினைச்சு கிட்டு இருக்கியா ஒரு வேள அம்மா நாளை க்கோ இல்ல ஒரு வாரத்தில்  ஓ பொண்ணு பாத்து முடிச்சிட்டா உனக்கு ஓகே வா என்க
ஆகாஷ்: உன் வாய்ல வசம்ப வெச்சி தேய்க உனக்கேன் டா இந்த அவசரம் என்க
சந்தோஷ் :நா என்னடா அவசர பட்டேன்  ஒரு வேள அப்படி நடந்தா நீ என்ன சொல்லுவன்னு தான் கேட்டன் டா
ஆகாஷ்:  அது நடக்கும் போது பாத்துக்கலாம் டா
சந்தோஷ்: ஹ்ம்ம் ஏதோ சொல்ர சரி பாத்துக்கலாம்.
ஆகாஷ் : ஹா நல்ல வேலை நியாபகம் வந்தது நா நம்ம நியு கம்பெனி சம்பந்தமா ஒரு எடம் பாக்க சொன்னேனே நியாபகம் இருக்கா       சந்தோஷ்: ஆமா மச்சி ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு
ஆகாஷ்: இட் வோஸ் க்ரேட் வை டிட்ன்ட் யு டெல் திஸ் பர்ஸ்ட்  இப்போவே அது விஷயமா மூவ் பன்லாம் டா
சந்தோஷ்: பைன் மச்சி பட் அதுல ஒரு சின்ன ப்ராப்லம் இருக்கு அதனால தான் டா அத உன்கிட்ட சொல்லாம விட்டேன் அத புல்லா முடிச்சிட்டு உங்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் டா
ஆகாஷ்: என்ன ப்ராப்லம் டா
சந்தோஷ்: அது என்னனா இப்போ நீ இந்த நியு கம்பெனிக்கு கேட்ட மாரி பர்பொக்டா எல்லா பெசிலிடீஸ் ஓடவும் ஒரு லேண்ட் அமஞ்சிருக்கு டா பட் அதுல ஒரு சின்ன சிக்கல் ஆகாஷ் என்னவென பார்க்க சந்தோஷ் தொடர்ந்தான்
சந்தோஷ்: என்னனா அந்தலேண்ட் ஓனர் இறந்துடார் டா இப்போ ஒரு த்திரீ டூ பைவ் மந்த் குள்ள தான் இருக்கும் சோ அத அவங்க ரிலேடிவ் யாரோ தான் விக்கராங்க டா
ஆகாஷ்: ஹோ அப்படியா சரி ஓகே டா பட் இதுல என்ன ப்ராப்லம் இருக்கு எனக்கு புரில
சந்தோஷ்: இல்லடா இது நிலம் சம்பந்தப்பட்ட  விஷயம் சோ நம்ம கொஞ்சம் கவனக் குறைவா ஒரு ஸ்டெப் எடுத்து வெச்சாலும் ப்ராப்லம் நமக்கு தான்
ஆகாஷ்:  சரி ஓக்கே டா பட் இடம் நமக்கு வசதியா இருக்குனு சொல்ரதால இந்த விஷயத்த நம்ம சீக்கிரம் பேசி பாக்கலாம் இப்போஇத யாரு விக்கராங்கலோ நம்ம டயரக்டா அவங்களையே கான்டெக்ட் பண்ணிக்கலாம்
சந்தோஷ்: ஹ்ம் .. என் கிட்ட லாயர் நம்பர் தான் இருக்கு நா அவர் கிட்ட பேசி அவங்க நம்பர் வாங்கி தரேன் ஓகேவா ஆகாஷ் சரி என தலை அசைக்க அவன் சென்று பேசி எண்ணை வாங்கி வந்தான் அதை ஆகாஷ் இடம் கொடுக்க அதை ஆகாஷ்  தனது தொலைபேசியில் நில உரிமையாளர் என குறித்துக் கொண்டான்
சந்தோஷ்  : ஓகே மச்சி அப்போ நா கிளம்பரன் நீ பேசிட்டு கால் பன்னு
ஆகாஷ்: சரி பாய் மச்சி

காதல் இதயம் ❤Donde viven las historias. Descúbrelo ahora