ஆகாஷ் வீட்டுக்கு வந்து தனதறைக்கு சென்று உடை மாற்றி வந்தான் .வந்தவன் தாயை தேட தாய் எங்கும் இல்லை சந்தியாவின் அறைக்கு வந்தவன் அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் அவளை அவ்வாறு கண்டதும் ஆகாஷ் மனம் ஏதோ போல் ஆக உடனே தங்கையின் அருகில் சென்றான்சந்தியா மிகவும் சுட்டித்தனமான பெண்
ஆகாஷ் மான்நிறம் என்றால் சந்தியா மான்நிறதை விட சற்று கூடிய நிரம் . சற்று பூசினர் போன்ற உடல் கொஞ்சம் குட்டையோ என சிந்திக்க வைக்கும் உயரம் . வட்ட முகத்தில் பெரிய கண்கள் என பார்க்க அழகாக இருப்பாள். குரும்பு தனத்தை பிறப்பிலேயே பெற்றவள் அவளுக்கு அண்ணன் என்றால் உயிர்.எதையும் அன்னையிடத்தில் பகிர்வதை விட அண்ணனிடம் பகிர்ந்து கொள்வதே அதிகம் . ஆகாஷ் போல் அல்லாது அவள் அனைவரிடமும் நட்பாக பழகுபவள். அவளது அண்ணனாக தந்தையாக நண்பனாக இருக்கும் ஆகாஷ் அந்த பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி வந்தான் ஆனால் அவன் அறியாது அவள் வாழ்வில் நடக்க போகும் சம்பவத்தில் அவன் நிலை என்ன.
அந்த சம்பவத்தின் தொடக்கப் புள்ளியை அவனே ஆரம்பிக்க போகிறான் என்பதை அறியாமல் அவன் தன் தங்கையின் அருகில் சென்று அமர்ந்து அவள் தலை முடி கோத
அவள் கண்களை திறந்து அவனைக் கான அவள் கண்கள் கலங்கி இருப்பதை கண்ட ஆகாஷ் பதரி அவளிடம் என்னவென கேட்க
மடை திறந்த வெள்ளம் போல் ஓ வென அழ ஆரம்பித்தால் தங்கை அவள் .
ஒருவாரு அவளை சமாளித்து என்ன வென விசாரிக்கஅண்ணா நெக்ஸ்ட் மன்த்ஓட என்னோட ஸ்டடீஸ் முடியிது அதனால என் ப்ரென்ஸ் எல்லாம் இந்த வீக் வர்ர ஹாலிடேல ஒரு டூர் போக ப்ளான் பண்ணி இருக்காங்க அதுக்கு நானும் போகட்டுமான்னு அம்மாகிட்ட கேட்டேன் அம்மா பர்மிஷன் கொடுக்கள அது கூட பரவால்லண்ணா அந்த வேலு அங்கில் பொண்ணுங்கன்னா அடக்கமா இருக்கனும் இப்படி பசங்க மாரி ஊர் சுத்த கூடாதுன்னு திட்டினதுக்கு அம்மாவும் சப்போர்ட் பண்றாங்க. என்ன அம்மா என்ன வேண்ணா சொல்லட்டும் மத்தவங்க முன்னாடி என்ன பேட் கர்ல் மாரி சொல்லும் போது கஷ்டமா இருக்குண்ணா .
என கூறி அழ அவன் அவள் உள்ளத்தை உனர்ந்து அவளை சமாதானப் படுத்தி அவன் தாயிடம் பேசி போக அனுமதி வாங்கி தருவதாக கூறி அவள் தலையை வருடிச் சென்றான் . அவளும் தன் அண்ணனே கூறிய பிறகு என்ன என நிம்மதியாக உணர்ந்தவள் ஜன்னல் ஓரம் அமர்ந்து ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள்
YOU ARE READING
காதல் இதயம் ❤
Romancehi❗ hello❗ i am Anshanno💖 இது என்னுடைய முதல் பதிப்பு ❤ ரெம்ப நாளா எனக்கு இங்க என்னுடைய கற்பனைகள பகிரனும்னு ரெம்ப ஆசை இன்னக்கி என்ன ஆனாலும் பரவால்ல நாமலும் எழுதிரலாம்னு start பன்னீட்டன் பா ஆனா நா என்ன எழுதினாலும் நம்ம சகோஸ் உங்கலோட ஆதரவு இல்லாம...