5.நீயே என் நண்பன்.

157 8 1
                                    

மரியம்-
"நான் என்ன செய்வேன் உமர்.சல்மான் என்னை காலிக்கிறானாம்.ஆனால் எப்படி அவனுக்கு புரியவைப்பேன்.என் நிலையை அறிந்த ஓரே ஒரு உயிர் நீங்கள் தானே.
இதை சல்மானுக்கு புரிய வைக்க அதிக சிரமம் எடுக்க மாட்டேன்.அல்லாஹ் உதவுவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

நான் சாலிஹான முஸ்லிம் பெண்மணி.உங்கள் விருப்பம்போல் என்னால் இயன்ற அளவு மார்க்கத்தினுள் நுழைகிறேன்.நபியவர்களின் வாழ்வை ஆதாரமாக வைத்து வாழ முயற்சிப்பேன்.

உங்களுக்கு தெரியுமா உமர்
நான் வகுப்பிற்கு செல்லும்போது மட்டுமன்றி வீட்டிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நேரமும் உங்கள் விருப்பப்படி அல்லாஹ் விற்கு பொருத்தமாக செயற்படுவேன் என்ற தூய எண்ணத்துடன் செயற்படுகிறேன்.

என்னால் இயன்ற அளவு எனது பார்வையை தாழ்த்தியவளாக இருக்கிறேன்.

உங்களுக்கு தெரியுமா...?
வகுப்பில் சகோதரிகளுடன் அதிகம் கதைப்பேன்.ஆனால் சகோதரர்களுடன் பேசுவது குறைவு.அதுவும் சல்மான் உடன் பேசவே மாட்டேன் என்றால் பொய்யாகாது.

அப்படியிருந்தும் எப்படி...
சல்மான்...
ஷைத்தான் எண்ணங்களை சீர்குலைப்பவன்.

நான் எனது எதிர்கால வாழ்வை எண்னி மட்டுன்றி மறுமை வாழ்வை இலக்காக கொண்டு வாழ எண்னுகிறேன்.எம் இருவரின் எண்ணமும் ஒன்று போல்
தான் இருக்கும்.

உமர் நான் இன்னும் கற்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன.இம்மை வாழ்வுக்கு மட்டுமன்றி மறுமை வாழ்வுக்கு தயாராக வேண்டும்.

படைத்த ரப்புக்கு தெரியும் எதை தந்தால் நான் வெற்றிபெறுவேன் என்று.

தாயின் கருவறையில் இருக்கும்போதே கப்று வரையான வாழ்வு எப்படி இருக்கும் என தீர்மானித்துவிட்டான்.

என்னால் முடிந்தது துஆ செய்வது மட்டுமே.

அதுமட்டுமல்ல உமர் எனக்கு சல்மானின் செயற்பாடுகள் எதுவுமே பிடிக்காது.அவனின் பேச்சு, உடை செயற்பாடுகள் என பல...
அதில் இது வேறு...
எப்படி ஏற்றுக்கொல்வேன்...

உமர் தனியாக முடிவெடுப்பது எப்படி.உதவிக்காவது நீங்கள் அருகில் இல்லை.நீண்ட நாற்களுக்கு பிறகு எனது உமருக்கு எழுதும் note."

"இப்போதுதான் மனதிற்கு திருப்தியாக உள்ளது.எனது உமரிடம் கூறிவிட்டேன்" அவளின் விழிகளில் ஓராயிரம் கவலை.உமரிடம் அதிகமதிகம் கேள்விகளை கேட்டது அவளின் உள்ளம்.பல நாற்களின் பின் தனிமையை உனர்ந்தாள்.உமரை நினைத்தாள்.

"அதற்குள் இரவாகி விட்டது.நேரம் செல்லச் செல்ல பயம் அதிகமாகிறது.சல்மானின் முகத்தை எப்படி பார்ப்பேன்."என குலப்பத்துடன் இருந்தாள்.

மனதில் ஏதோ பயத்துடன் இருந்தாள்.

::"அதற்குள் நேரம் 8 மணி....?"
அவள் வகுப்பிற்கு செல்வதை வெருத்தாள்.போய்த்தான் ஆகவேண்டும்..காரணம்.சல்மான் வருவான் ஆனால் வீட்டில் கேள்வி கேற்பார்கள் அதை சமாளித்தாலும் நண்பர்கள் விடமாட்டார்கள்.அதுவும் சபியும்  ரீமாவும் விட்டுவிடுவார்களா என்ன.

வேண்டா வெறுப்புடன் ஆயத்தமானாள்.

******
எழுத்துப்பிழைகள் இருக்கும்.Sorry
.and also there vl b grammar mstaks dr frnds.I'm really sorry.

எனது விழிWhere stories live. Discover now