6.பொய்....

101 6 4
                                    

சல்மான்:

மனதில் தோன்றியதை சட்டென்று கூறிவிட்டான் சல்மான்.ஆனால் அவனின் உள்ளம் மரீயின் பதிலை எதிர்பார்த்திருந்தது.
"என்ன இது...
நேரம் செல்வதில்லை.
காலையில் முதல் வேலையாக மரீ யை சந்திக்க வேண்டும்.
நிறைய கதைக்க வேண்டும்.ஆனால் எப்படி.அவள் எனக்கு பதில் சொல்லவில்லையே.
அவள் மனதில் நான் இடம்பிடிக்காமல் இருக்குமளவு நான் அழகிலோ அறிவிலோ பணத்திலோ தாழ்வானவன் அல்ல.
ஏதோ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.
எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்கள் பொருத்திருந்தாள் அவளே என்னிடம் காதலை கூறியிருப்பாள்.
நானும் பெண்களை பற்றி நன்றாக தெரிந்தவன்தான்.
எத்தனையோபேர் என்னிடம் அவர்களின் மனதில் தோன்றுவதை கூறியுள்ளனர்.ஆனால்.... மரீ....

அவள் வித்தியாசமானவள்.வகுப்பில் அவளை காணாவிட்டால் நெஞ்சில் ஒரு பதற்றம்.சிந்தனை எல்லாம் அளை பற்றியதாகவே இருக்கும்.
அவளின் விழி...
அதன் பார்வை...

அமைதியான பேச்சு.அழகான முகம்.
அவளின் செயற்பாடுகள் எல்லாமே வித்தியாசம்.பாராட்ட தோன்றும்.ஆனால் நான் அவளை அவ்வளவு கவனிக்கிறேன் என அவளுக்கு தெரியாது.
அவளுக்கு தெரிய வந்தால் அவ்வளவு தான்.

நாளை ...
முடிவு..."

என மனதால் நினைத்தான்.
-----
"காலையாகிவிட்டது.
தெருவில் 3வது சந்தியில் இருந்தால் சரியாகும்.
மரீ எப்படியும் 7.15 ஆகும்போது அந்த தெரு வழியே செல்வாள்..."
இவ்வாறு என்னியவனாக சல்மான் ஆயத்தமாகி வீட்டைவிட்டு வெளியேரினான்.

அந்த சந்தியருகில் நின்றவனாக தன் கைக் கடிகாரத்தை பார்த்தான்.என்ன ஆர்வம்.நேரம் காலை 6 மணி.

எவ்வாறு நேரத்தை போக்குவது என எண்ணிய அவனுக்கு ஒரு யோசனை வந்தது.
"நேரம் போகவில்லை.அவளுக்காக என்னசரி செய்ய வேண்டும்."
என முனுமுனுத்தவனாக அருகில் இருந்த கடைக்குள் சென்று ஏதோ வாங்கினான்.

ஒருமாதிரியாக நேரம் 7 மணி...
8மணி...
இன்னும் காத்திருந்தான்.ஆனால் அவள் வரவில்லை.வகுப்பிற்குச் சென்று ஆசிரியரின் அனுமதியுடன் தனது கதிரையில் உற்கார்ந்தவனின் உள்ளம் மரீயை தேடியது.அவள் வகுப்பினுல் இருப்பாள் என உள்ளம் சொன்னது.

"ரீமாவிடம் கேற்போம்.மரீ...."என நிருத்தினான்.மரீ ரீமா வுடன் கதைத்துக்கொண்டிருந்தாள்.

"பொய்...
பொய் பொய்.எப்படி மரீ...வகுப்பில்..."

"எனக்கு பதில் கூரவும் இல்லை.ஏன் மரீ..."
என மனதில் என்னினான்
"அவளாக வந்து என்னிடம் பேசும்வரை நான் அவளிடம் எதுவும் கேற்கமாட்டேன்."
என முகத்தை திருப்பிய அவனால் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.

வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும்வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் மரீ இருந்தாள்.

அடிக்கடி மரீயை பார்த்தான்.காரணம் மரீ அவனின் பெயரை உச்சரிப்பது போல அவனுக்கு அடிக்கடி யோசனை.

வகுப்பு முடிந்தும் மரீ எதுவும் கூறாமல் வழமைபோல கதைத்தவளாக சென்றாள்.

அன்று அவளுடன் கோபப்பட்டதுபோல யாருடனும் சல்மான் கோபம் கொண்டதில்லை.
அவன் கோபப்பட்டது கவலையினாலே தவிர வெறுப்பினால் அல்ல.

அவள் தன்னுடன் பேசும்வரை அவளுக்கு பேச்சுக்கொடுப்பதில்லை என மனதில் உறுதியுடன் வீடு சென்றான் சல்.

sms வந்தது போல ஒரு சத்தம்.
பார்த்தால் சபீயிடம் இருந்து sms வந்திருந்தது.

"என்ன இன்று வழமைக்கு மாற்றமான அமைதி.என்னசரி சுகயீனமா இல்லை பிரச்சினையா...?"

"ஒன்றுமில்லை."

"பொய்.அதுவும் என்னிடம்.
என்ன நடந்தது சல்ல்ல்....?"

"இல்லை.மரீ என்னசரி சொன்னாளா..
.?"

"அவள்.ஏன் என்னரி சொன்னாளா...?"

"இல்லை.சும்மாதான் கேட்டேன்.அவள் அமைதியாக இருந்தாலே.அதுதான் என்னவென்று கேட்டேன்."

"இல்லை.என்ன சொன்னாலும் அவளின் செயற்பாடுகள் மாற்றமாகதான் இருக்கும்.
ஒன்று சொல்கிறேன் தவறாக என்ன வேண்டாம்.அவளுக்கு உன்னை பிடிக்காத அளவு வேறு யாருனூம் வெறுப்பு கிடையாது."

சல்மானின் இதயம் ஒருகணம் நின்றுவிட்டதுபோல இருந்தது.ஆனால் அவனுக்கு சபியை முழுமையாக நம்ப முடியவில்லை.

சபி சொல்பவை பொய்யாக இருக்க வேண்டும் என பிரார்த்தித்தவனாக இருந்தான்.

எனது விழிHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin