"ஹாய்...! என்ன இவ்வளவு நேரம்?" என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா.
"ஹாய்!" என்று அமைதியாக உள்ளே வந்தான் நவிலன்.
"ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க... வேலை அதிகமா?" என்றாள் அவன் கன்னம் தடவி.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் நார்மலா தான் இருக்கேன்." என்று தளர்வாய் சோபாவில் அமர்ந்தான்.
"இந்தாங்க டீ..." என்று கப்பை அவனிடம் நீட்டியவாறே அவனருகில் அமர்ந்தாள்.
ஏதோ யோசித்தபடி, எதுவும் பேசாமல் டீயை குடித்தான்.
"அப்புறம் அத்தை போன் பண்ணியிருந்தாங்க..."
"ம்..."
"அடுத்த திங்கட்கிழமை ஊர்ல கோவில் பண்டிகையின் போது, அவங்க தேர் இழுக்குறாங்களாம், நம்மளையும் ஊருக்கு வரச் சொன்னாங்க!"
"இல்லை வேண்டாம்..." என்றான் மொட்டையாக.
"ஏன் திங்கட்கிழமை தானே... வருணுக்கும், உங்களுக்கும் ஒரு நாள் லீவு போட்டால் போதுமே, நாம் ஊருக்கு போயிட்டு வந்திடலாம்!" என்றாள் அவனை சம்மதிக்க வைக்கும் நோக்கோடு.
"எனக்கு பிடிக்கவில்லை... இன்ட்ரெஸ்ட் இல்லை என்றால் விட்டு விடு இனியா. எனக்கு டயர்டா இருக்கு, டிபன் எடுத்து வை. இதைப் பற்றி மேலும் பேச நான் விரும்பவில்லை..." என்று உள்ளே சென்றான் நவிலன்.
எனக்கு எரிச்சலாக வந்தது, இருந்தாலும் டயர்டாக இருக்கும் பொழுது பேச வேண்டாம் என்று அமைதியாகி விட்டேன்.
YOU ARE READING
நிதர்சனம்
Short Storyதாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.