♣6♣

2.4K 113 30
                                    

"உண்மை தானேடா கண்ணம்மா... ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் தெயர் பீலிங்க்ஸ். அப்பா, அம்மா செய்தது தப்பு தான். அவங்க மாமாவிடம் இப்படி சொல்லியிருக்கிறோம்னு, என்னிடம் போனில் சொன்னதும்... எனக்கு ஒரே அப்செட். அவங்க செய்தது எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்யறது... அவங்களிடம் சண்டையா போட முடியும்? அவங்க வேற ஊரில் தனியா இருக்காங்க... வயசானவங்க, அவங்களுக்கு தெரிந்த நாலேஜ் அவ்வளவு தான். அதற்காக குடும்பத்தைக் கோர்ட்டாக்கி நியாயத்துக்காக ஒருத்தருக்கொருத்தர் வாதாடிக் கொண்டிருக்க முடியாதில்லையா... குடும்ப அமைதிக்காகவும், கௌரவுத்திற்காகவும் விட்டுக் கொடுத்து தான் போயாகனும்... அதில் தப்பில்லையே..." என்றான் நவிலன் அவள் கன்னத்தை வருடியவாறு.

"அப்புறம் இதைக் கேள்விப்படும் பொழுது, உன் மனது எவ்வளவு வேதனைப்படும் என்றும் கவலையாக இருந்தது!" என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே.

"ம்... எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது!" என்றாள் இனியா கண்கள் கலங்க அவன் தோள்களில் சாய்ந்தவாறு.

"புரிகிறதுடா அதனால் தான் எதுவும் பேசாமல் உன்னை ஊருக்கு அனுப்பி வைத்தேன். இந்த சூழ்நிலையில் உனக்கும் சரி, அத்தை மாமாவுக்கும் சரி ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்தால் கொஞ்சம் ஆறுதலாக உணர்வீர்கள் என்று எண்ணினேன்!"

"ம்ம்... ஆமாம்! அது சரி. அப்போ நான் எந்த தப்பு செய்தாலும், என்னிடமும் சண்டை போட மாட்டீங்க... விட்டுக் கொடுத்துப் போவீங்க அப்படிதானே?" என்றாள் குறும்பாக அவனைப் பார்த்து கண் சிமிட்டி.

நிதர்சனம்Where stories live. Discover now