டிபன் சாப்பிட்டதும் வருண் தூங்கி விட, அவனைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, நவிலன் அவன் அருகிலேயே அமர்ந்து கண்களை மூடி சாய்ந்துக் கொண்டான்.
"நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?" என்றாள் இனியா நவிலனுக்கு எதிரே வந்து கோபமாக.
"என்ன?" என்றான் புருவம் சுருக்கி.
"ஒன்றும் தெரியாதவர் மாதிரி நடிக்காதீங்க... உங்களுக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்திருக்கு!"
"கொஞ்சம் தெளிவாப் பேசு இனியா!"
"இன்னும் என்ன பேசனும்? எங்கப்பா அம்மா வந்தால்... இரண்டு நாளில் கிளம்பிடனும், அதற்கு மேல் தங்க கூடாது அப்படின்னு... அவங்களுக்கு போன் செய்து உங்கப்பா அம்மா சொல்லி இருக்காங்களாமே..." என்றாள் ஆக்ரோஷத்தோடு.
"அது வந்து..."
"போதும், எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா?" என்றாள் முகம் சிவக்க.
"ம். ஆமாம் உண்மைதான்!" என்றான் அமைதியாக.
"அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, இதைச் சொல்ல? எங்கப்பா அம்மா வந்து என்ன சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறாங்களா? வரும் போதும் போகும் போதும் காய்கறி, மளிகைன்னு வாங்கிப் போடறதில்லாம... வேண்டாம்னு சொன்னாக் கூட கேட்காம, கையில் இரண்டாயிரம், மூவாயிரம்னு பணம் கொடுத்திட்டுப் போறாங்க. அவங்க ஒண்ணும் இங்கே ஓசிச் சாப்பாடு சாப்பிட வரலை!" என்றாள் கோபமாக.
VOCÊ ESTÁ LENDO
நிதர்சனம்
Contoதாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.