மறுநாள் காலையில், "நான் ஊருக்கு கிளம்பறேன்!" என உம்மென்ற முகத்தோடு கையில் பேகோடு எதிரே வந்து நின்றாள் இனியா.
"சரி வா!" என்று எதுவும் பேசாமல் அமைதியாக பஸ் ஸ்டாண்ட் அழைத்துச் சென்றான்.
இரண்டு நாட்கள் ஓடி விட்டது.
அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் மனது மிகவும் பாரமாக இருந்தது நவிலனுக்கு. மொபைல் ரிங் ஆனது, எடுத்து காதில் வைத்தான்.
"ஹலோ!"
"நான் பஸ் ஏறி விட்டேன். இன்னும் ஆறு மணி நேரத்தில் வந்து விடுவேன்!" என்றாள் இனியா.
"சரி பக்கம் வந்திட்டு போன் பண்ணு, நான் பஸ் ஸ்டாண்ட் வந்திடுறேன்!"
இரவு எட்டு மணிக்கு வருணோடு வந்து சேர்ந்தாள். வெளியிலேயே சாப்பிட்டு விட்டு, தூங்கி வழிந்த குழந்தையோடு வீடு வந்தார்கள்.
குழந்தையை படுக்க வைத்துவிட்டு உடைமாற்றி வந்து அமர்ந்தான்.
அவள் மெல்ல ரூமிற்குள் வந்தாள்.
எதுவும் பேசாமல் சட்டென்று அவனை கட்டிக்கொண்டு, "சாரி..." என்று அழ ஆரம்பித்தாள்.
"ஏய்... என்னம்மா?" என்றேன் அவளை அணைத்தவாறு.
"அப்பா எல்லாம் சொன்னாங்க..."
"மாமா என்ன சொன்னாங்க?"
"அவங்க சொன்னதை எல்லாம் மனதில் வச்சுக்காதீங்க... நீங்கள் எப்பவும் போல இங்கே வரனும், தங்கனும்... இது உங்க வீடு, உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு சொன்னீங்களாமே..." என்றாள் கண்கள் கலங்க.
ŞİMDİ OKUDUĞUN
நிதர்சனம்
Kısa Hikayeதாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.