♣7♣

3.2K 149 104
                                    

"ஹஹா... ஹஹா..." என்று சிரித்தான் நவிலன்.

"ம்... கண்டிப்பா ஆனால் எனக்கு இன்னும் ஒன்றும் நன்றாக தெரியும்!" என்றான் கண்ணடித்தபடி.

"என்ன?" என்றாள் இனியா ஆர்வமாக கண்கள் ஒளிர.

"என் இனியா குட்டி அந்த மாதிரி எந்த தப்பும் செய்ய மாட்டாள்... அவளுக்கு யார் மனதையும் புண்படுத்த தெரியாது. எந்தக் கோபமாக இருந்தாலும் என்னிடம் தான் காண்பிப்பாளே தவிர மற்றவர்கள் மனம் புண்படும்படி அவள் ஒருநாளும் பேசவே மாட்டாள்!" என்றான் அவள் கன்னங்களில் முத்தமிட்டவாறே.

"ஹ... ஹ... ஹச்... ஓவர் ஐஸ்!" என்றாள் தும்மியபடி.

"ஹேய்... ஐஸ் இல்லை. உண்மையை தான் சொல்கிறேன். இதுவே வேற பெண்ணாயிருந்தால், இந்நேரம் எங்கப்பா அம்மாவிடம் சண்டைப் போட்டிருப்பாள். பிரச்சினைப் பெரியதாகி ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கடமாக இருந்திருக்கும். அந்த விஷயத்தில் நான் லக்கி!" என்றான் அவளை இறுக அணைத்தபடி.

"உண்மை தான்... எனக்கு அன்றைக்கு வந்த கோபத்திற்கு எப்படி பேசியிருப்பேனோ... எனக்கே தெரியாது. ஆனால் நான் வளர்ந்த விதம் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டது ம்ஹூம்..." என்று பெருமூச்சு விட்டவள்,

"ஆனால்... காலத்திற்கும் அந்த வருத்தம் மட்டும் என் மனதிலிருந்து போகாது. அதற்காக என் கடமையிலிருந்து நான் தவற மாட்டேன், அவர்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்வேன்!" என்றாள் அமைதியாக.

எதுவும் பேசாமல் அவள் கரங்களை வருடினான் நவிலன், சற்று நேரம் அமைதி நிலவியது.

சட்டென்று சுதாரித்த இனியா, அவன் ஃபீல் செய்வதைப் பார்த்து, அவர்கள் செய்த தப்பிற்கு... இவன் என்ன செய்வான்... என்று அவன் தோள்களில் சாய்ந்தவாறு,

"உங்கள் மாமா என்ன சொன்னார் தெரியுமா? அவர் மாப்பிள்ளை ரொம்ப நல்லவராம்...! அவங்க பேசிய அடுத்த அரை மணி நேரத்தில், அவர் போன் செய்து ஆறுதலாய் பேசினாராம்... யாருக்கும் மனஸ்தாபம் ஏற்படாமல் சுமூகமாக நடந்துக் கொள்கிறாராம்... வருணையும் நான் அதே மாதிரி நல்லப் பையனாக வளர்க்க வேண்டுமாம்..." என்று புன்னகையுடன் ராகம் பாடினாள்.

"என் மேல் உனக்கு எதுவும் வருத்தமில்லையேடா..." என்றான் நவிலன் அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை நேராகப் பார்த்து.

"இல்லை... சுத்தமாக இல்லை..." என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள்,

அவனை இறுக கட்டிக் கொண்டு, "ஐ லவ் யூ!" என்றாள்.

********சுபம்********

நிதர்சனம்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin