#60#

942 88 66
                                    

மும்முரமாக போனில் உரையாடி கொண்டிருந்த அஸ்வின், மனுவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினான்.

காதுகளை இறுகப் பொத்தி கொண்டிருந்தவளின் முகத்தில் வியர்வை ஆறாய் ஒடியது.

அதை கண்டு திகைத்தவன், "ஐ கால் யூ பேக்!" என பதிலை எதிர்பாராமல் போனை வேகமாக கட் செய்தான்.

"ஹேய்... வாட் ஹேப்பன்? என்னவாயிற்று?" என்று குழப்பத்தில் இரு மொழிகளிலும் வினவினான்.

அவன் கேட்டு கொண்டிருக்கும் பொழுதே... சேரிலிருந்து மனு மயங்கி சரிய ஆரம்பித்தாள்.

"ஓ காட்! ஏய்..." என்று கத்தியபடி விரைவாக அவளருகில் ஓடி வந்த அஸ்வின், அவளை தரையில் விழாமல் தாங்கினான்.

அவளின் உடை நனையுமளவுக்கு வியர்த்து சில்லிட்டு போயிருந்தாள் மனு.

அதை உணர்ந்தவன், 'என்னவாயிற்று இவளுக்கு? வரும்பொழுது நன்றாக தானே இருந்தாள்... நான் போன் பேசுவதற்குள் என்ன நடந்திருக்கும்? எதுவும் உடம்பு முடியவில்லையா... இரண்டு நாட்கள் தாமதாக வேறு வந்திருக்கிறாள்!' என்று புருவம் சுளித்தபடி யோசித்தவன், அவளின் கன்னத்தை லேசாக தட்டினான்.

"ஹேய்... இங்கே பார்!" என்ற சொல்லுக்கு பலனில்லாமல் போகவே, விரைவாக அவள் கரம் பற்றி பல்ஸை ஆராய்ந்தான்.

பல்ஸ் ரேட் நார்மலில் இல்லை என்பது புரிந்தது, இந்த ஏஸியிலும் இவளுக்கு வியர்ப்பதற்கான காரணம் இது தான் என்ற முடிவுக்கு வந்தவன், கம்பெனி டிஸ்பென்ஸரிக்கு போன் செய்து விவரத்தை கூறி தகுந்த மருத்துவ உபகரணங்களோடு மருத்துவரை வரச் சொன்னான்.

அவளுடைய லெட்டரை எடுத்து மீண்டும் ஒரு முறை பெயரை பார்த்தான்.

'மனஸ்வினி!'

சிறது தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து, "மனஸ்வினி... ஹலோ..." என்று மீண்டும் கன்னத்தில் தட்டினான்.

ம்ம்... என்று முனகினாளே தவிர கண்களை திறக்கவில்லை.

எரிச்சலாக வந்தது அவனுக்கு, உடல்நிலை சரியில்லாதவளுக்கு... அப்படி என்ன அவசரம் உடனடியாக வந்து சேர வேண்டுமென்று? என்று மயங்கியிருந்தவளை முறைத்தவன், தன் எக்ஸிகியுட்டீவ்க்கு போன் செய்து அடுத்தடுத்த கட்டளைகளை பிறப்பித்தான்.

சின்ன சின்ன பூவேWhere stories live. Discover now