#101#

1.6K 108 116
                                    

அனைத்து செல்களிலும் மனுவே நிரம்பியிருக்க கை முஷ்டிகளை இறுக்கியவன், 'நோ... இதற்கு மேல் எதையும் எண்ணி குழம்ப கூடாது, என்ன நடந்தாலும் பரவாயில்லை எனக்கு அவள் வேண்டும். மனுவை யாருக்கும் நான் விட்டுத் தர மாட்டேன், அவள் எனக்கு சொந்தமானவள்!' என்ற வெறி அவனுக்குள்ளே பூதாகரமாக கிளம்ப ஆரம்பித்தது.

விழிகளை இறுக்க மூடி ஒரு இடத்தில் அமைதியாக நின்றவன் முகத்தில் ஒரு தீர்க்கம் வந்தது.

தன் மொபைலை கையில் எடுத்தவன், ரமணனுடைய நம்பருக்கு டயல் செய்தான்.

அஸ்வின் சட்டென்று வெளியேறியதால் உண்டான இறுக்கத்தில், அனைவரும் மெல்லிய குரலில் தங்களுக்குள் குழப்பத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.

ரமணனுடைய மொபைல் ரிங்காக எடுத்து டிஸ்ப்ளேவை பார்த்தவன், நெற்றி சுருக்கினான்.

"ஹலோ!"

ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு, "மாமா! நான் அஸ்வின்..." என்றான் தயக்கத்துடன்.

அவனுடைய அழைப்பில் ரமணனுடைய முகம் மெல்ல மலர்ந்தது. அவனிடம் என்றோ கூறியிருந்தான், தன்னை அங்கிள் என்றெல்லாம் அழைக்க கூடாது தமிழில் தான் அழைக்க வேண்டும் என்று... ஆனால் அவன் உத்தரவிட்டதிலிருந்து இன்று வரை ஏதோ ஒரு தயக்கத்தில் நன்றாக பேசினாலும் எந்த ஒரு உறவு முறையையும் குறிப்பிடாமல் பொதுவாக தான் பேசிக் கொண்டிருந்தான் அஸ்வின். அதை தாண்டி அழைக்கிறான் என்றால் முடிவெடுத்து விட்டானா என்று மகிழ்ந்தவன் அங்கிருப்பவர்களுக்கு தெரிய வேண்டாம் என, "ம்..." என்று மட்டும் எதிரொலித்தான்.

"வந்து... நான் உங்களிடம் சற்றுப் பேச வேண்டும், பின் பக்கமுள்ள தோட்டத்திற்கு வருகிறீர்களா ப்ளீஸ்...?" என்றான்.

"ம்... ஓகே!" என்றபடி போனை வைத்த ரமணன், அமைதியாக இருக்க.

"என்னப்பா... யார்... அவரா? என்ன சொன்னார்?" என்றாள் மனு அவன் கரத்தை பிடித்துக் கொண்டு விழிகளில் தவிப்போடு.

"ஷ்... இப்பொழுது எதற்கு இவ்வளவு டென்ஷன்? ஒன்றுமில்லை ரிலாக்ஸாக இரு, அஸ்வின் தான் நான் சென்று பேசி வருகிறேன்!" என்று அவன் எழ,

சின்ன சின்ன பூவேWhere stories live. Discover now