6. மூன்றாம் முறை

390 58 37
                                    

--------------------------------------------------------------
மழையில் கூட்டைத் தேடி பறக்கும் பறவையைக் கண்டால் தோனுவதுண்டு,
இந்த மழை சுமந்து அதன் இறக்கை வலித்திடுமோ?
--------------------------------------------------------------

--------------------------------------------------------------மழையில் கூட்டைத் தேடி பறக்கும் பறவையைக் கண்டால் தோனுவதுண்டு, இந்த மழை சுமந்து அதன் இறக்கை வலித்திடுமோ?--------------------------------------------------------------

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

வார நாட்களில் ஆபஸில் பூட்டிவைக்கப்பட்டு பின் வாரியிறுதி நாட்களில் தனித்துவிடப்பட்ட பறவையாய் ஊரை சுற்றி திரிந்தேன். காலையில் சமையலை முடித்துவிட்டு கேமராவுடன் வெளியில் கிளம்பிவிடுவேன். ஜப்பானுக்கு வந்த புதிதில் வெளியில் செல்ல சற்று தயக்கமாகவே இருந்தது. 94% ஜப்பானியர்களும் வெறும் 6% வெளிநாட்டவர்களும் வாழும் இந்த நாட்டில் தமிழன் நான் தனித்து நின்றேன். ஜப்பான் மொழி தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டதும் ஒரு காரணம்.

ஆனால் ரூமில் நான்கு சுவர்களை வெறித்து பார்ப்பது என் தனிமையின் வலியை அதிகப்படுத்தியது. Social media, internet, YouTube எல்லாம் வந்தும் நேரடியாக மனித உரையாடல்களோ interactionஓ இல்லை என்றால் பித்து பிடிக்கும் நிலைக்கு நம்மைக் கொண்டுச் செல்லும். எனவே தான் எல்லா புது தொழில்நுட்பமும் இருந்தும் human interactionஐ ஈடு கட்ட முடிவதில்லை.

மக்களிடம் பேசாவிட்டாலும் முன் பின் அறியாதவரோடு பகிரும் ஒரு நொடி புன்னகை, கூட்டத்தில் ஒருவனாக பஸ்ஸில் நின்று பயணிப்பது என இந்த சின்ன interactionsஇல் மனிதம் வாழ்ந்துக்கொண்டிருந்தது.

கறு வானம் தெரு விளக்குகளின் மஞ்சளைப் பூசிக்கொண்ட தருணம். மாலை 7 மணியை தாண்டியிருந்தது என்பதை வயிறு முழக்கத்தோடு சொல்லியது. கேமராவில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒரு முறை அலசிவிட்டு பின் கிளம்பினேன். காரை ஸ்டார்ட் செய்த ஐந்து நிமிடங்களில் மழை சோ வென கொட்டியது. டிராபிக் ஒன்றின் பின் ஒன்றாக எறும்பு போல் ஊர்ந்து சென்றது. ஒவ்வொரு டிராபிக் லைட் இலும் நின்று நிதானமாய் மூச்சு வாங்கி வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தன. எதிரே வந்த வாகனம் லைட் அடிக்க பக்கத்தில் இருந்த கார் பிரகாசமாய் தெரிந்தது. ஆம், இரு முறை நிகழ்வது இன்று மூன்றாம் முறையாய் நடந்தது.

அழகியல்Where stories live. Discover now