18. வேலை

200 21 9
                                    

"உனக்கு சிகரெட் பிடிக்க வக்கில்ல அதுக்கு நான் என்ன பண்றது," என தெனாவட்டாக முகத்தைத் திருப்பிக்கொண்டு வினோத் பதில் சொல்ல ராஜுக்கு கோபம் தலைக்கேறியது. ஸ்கூல் படிக்கும் வினோத் காலேஜ் படித்த தன்னை மரியாதையின்றி பேசுவதைக் கேட்ட ராஜின் கை ஓங்கியது. யாரும் நடப்பதை சுதாரிக்கும் முன் வினோத் கன்னத்தில் ராஜின் கைரேகை வெடி சத்தத்துடன் பதிந்தது. சுதர்சன் உடனே சுவரிலிருந்து இறங்கி குதித்து மீண்டும் ஓங்கிய அண்ணனின் கையை தடுத்துப் பிடித்தான். சீரிய வினோத்தை மற்ற பசங்களும் பின் தள்ளி தடுத்தனர். சுதர்சன் ராஜை தர தர வென கையைப் பிடித்து கொல்லையிலிருந்து வீட்டுக்குள் இழுத்துச் சென்றான்.

"டேய் விடுடா, அவனுக்கு என்ன திமிரு. டேய் விடு டா!" ராஜ் சுதர்சனின் பிடியிலிருந்து விலக உடனே சுற்றி இருந்த நான்கைந்து பசங்கள் ராஜை மீண்டும் பிடித்தனர். அவனை வலுக்கட்டாயமாக வீட்டினுள் இழுத்து செல்ல வீட்டில் வெற்றிலை பாக்கை மென்றுக் கொண்டிருந்த பெருசுகள் விழித்தனர். சுதர்சனும் மற்ற பசங்களும் ராஜை இழுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினர். தெருவுக்கு வந்த பின் தான் ராஜை அவர்கள் விடுவித்தனர்.

"அண்ணே விடுன்னே, அதான் ஒரு அடிய போட்டுட்டியல்ல. போதும் விட்டுருன்னே இந்த பிரச்சனைய."

"அவன் பேசுற பேச்சை பார்த்தியல்ல. சிகரெட் புடிக்க வைக்கில்லையாம். ச்சே. அந்த கருமத்த பிடிக்க காரி துப்பனும். படத்த பார்த்துட்டு பெரிய ஆள் மாதிரி காட்டிக்க இந்த கருமத்தை எடுக்குறான். இன்னும் முளைக்கவே இல்ல. "

சுதர்சன் நாசூக்காக அண்ணனை வீட்டை விட்டு தூரமாக அழைத்து சென்றான். மீண்டும் பெரியப்பா வீட்டு கேட் (gate) ஐ கண்டதும் ராஜ் சுதர்சனிடம், "நா இங்கயே நிக்குறே. நீ உள்ள என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வா," என தம்பியை வேவு பார்க்க அனுப்பினான். சுதர்சன் வீட்டினுள் அடியெடுத்து வைக்கும் முன்னே சண்முகமும் மகாலட்சுமியும் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

அழகியல்Where stories live. Discover now