சுவாஹனா நிம்மதியாக படுத்திருப்பதை காண காண சாய்கிருஷுக்கு கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது.
அவளை ஏதாவது செய்து அவள் தூக்கத்தை கெடுக்க வேண்டும் என்று வேக வேகமாக யோசித்தவனுக்கு ஒன்று தோன்றியது, ஆனால் அது ரொம்ப சிறுபிள்ளைத்தனமாக இருக்குமோ... என்று இதழ் கடித்தபடி நின்றான்.
'ப்ச்... பரவாயில்லை, வேறு என்ன செய்வது? அவளை கஷ்டப்படுத்தவும் கூடாது என்று விட்டார் அப்பா, அது எனக்கும் வராது... அது வேற விஷயம்!' என்று எண்ணியவனுக்கு தான் செய்யப் போகும் செயலை எண்ணி முகத்தில் முறுவல் மலர்ந்தது.
'எனக்கு ஏன் இவளிடம் மட்டும் இப்படி தோன்றுகிறது? இது வரை யாரிடமும் இப்படியெல்லாம் செய்ததே இல்லை. எது... எப்படியோ அவளுக்கு எரிச்சல் மூட்டி பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அவ்வளவு தான்!' என்று விழிகள் மூடி படுத்திருந்த அவளை திரும்பி பார்த்தான்.
தான் எண்ணியதை செயல்படுத்த முயலுகையில் அவனுக்கே சற்று கூச்சம் தோன்ற தயங்கி நின்றான். சில நிமிடங்கள் அப்படியே நின்றவன் பின் இங்கு தான் யாருமே இல்லையில்லை... அதுவும் அவளும் பார்க்கவில்லை என சட்டென்று ஒரு எகிறு எகிறி கட்டிலின் மீது விழுந்தான்.
கிருஷ் அவ்வாறு எம்பி குதித்ததில், சுஹா படுத்திருந்த இடத்தை விட்டு ஐந்து சென்டி மீட்டர் மேலே எழும்பி திரும்ப கட்டிலில் விழுந்தாள்.
அதை கண்டதும் முகமெல்லாம் மலர சடாரென்று அவளுக்கு முதுகு காண்பித்தபடி திரும்பி படுத்து கொண்டான் அவன்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் அலுப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்ட சுஹா, திடீரென்று தான் மேலே போய் கீழே வரவும் என்னவோ ஏதோவென்று அரக்கபரக்க எழுந்து அமர்ந்து என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள இயலாமல் சுற்றும்முற்றும் பார்த்து விழித்தாள்.
மெல்ல தூக்கம் கலைய நிதானமாக கண்களை மூடி சிந்தனை செய்தாள். மிகவும் தூக்க கலக்கமாக இருந்தது அவனிடம் சண்டையிட்டு விட்டு தூங்கி விட்டேன்.
YOU ARE READING
தீயுமில்லை... புகையுமில்லை...
General Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம்...