"இங்கே எதுவும் நன்றாக இல்லை போகலாமா?" என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள்.
'சுவாஹனா...!' என வியப்புடன் வைபவ் அவளை நோக்க, கிருஷ்ஷோ கொதிநிலையில் இருந்தான்.
அப்பொழுது தான் வைபவை கவனித்தவள், "ஹாய்! நீங்கள் எங்கே இங்கே?" என்றாள் ஆச்சரியமாக.
"நீ ஆச்சரியப்படுறதெல்லாம் இருக்கட்டும்... என்ன நீங்கள் இருவரும் சேர்ந்து என்னை இப்படி தொபுக்கடீர் என்று சர்ப்ரைஸ் ஷாக்கிங் கடலில் தூக்கி போட்டு விட்டீர்கள்?" என கேலியாக வினவினான்.
"அது..." என்று அவள் தயங்க, கிருஷ் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.
"திருமணமாகி எத்தனை நாட்கள் ஆகிறது?"
"ஒரு மாதம், பெரியவர்கள் ஏற்பாடு செய்த அரேன்ஜ்ட் மேரேஜ் தான்!" என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
"ஓ! குட்... குட்... உனக்கேற்ற பொருத்தமான ஜோடி இவள் தான் என்று நான் கூட தலைவரிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். இவன் தான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என முறுக்கி கொண்டு திரிந்தான், இறுதியில் மாட்ட வேண்டிய இடத்திலேயே மாட்டிவிட்டாயா..." என்று வைபவ் கேலி செய்து சிரிக்க அதற்குள் அவனுடைய மொபைல் கூவியது.
எடுத்துப் பார்த்தவன், "ஓகேமா... இன்னொரு நாள் நிதானமாக பார்க்கலாம் அஃபிஷியலாக வந்தேன். உன் புது நம்பரை கொடு!" என கிருஷிடம் கேட்டு வாங்கி கொண்டவன் அவர்களிடம் கையசைத்து விடைப்பெற்று சென்றான்.
"சரி... கால் வலிக்க சுற்றியதில் எனக்கு பயங்கரமாக பசி வந்து விட்டது. நாம் சாப்பிடப் போகலாமா?" என வினவினாள் சுஹா.
ம்... என்ற ஒற்றை சொல்லுடன் லிஃப்ட் நோக்கி நடந்தான் கிருஷ்.
வார விடுமுறை என்பதால் லிஃப்டில் ஏகத்திற்கும் கூட்டம் இருக்க, முண்டியடித்துக் கொண்டு தான் அவர்கள் ஏற வேண்டியிருந்தது.
நெரிசலை பயன்படுத்திக் கொண்ட கயவன் ஒருவன், சுஹாவின் இடையை மெல்ல தடவினான்.
DU LIEST GERADE
தீயுமில்லை... புகையுமில்லை...
Aktuelle Literaturபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம்...