பாகம் 1: கல்லூரி

500 30 5
                                    

அனு பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு நல்ல கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் வாங்கினால். அவள் கூடை பந்தில் ஸ்டேட் லெவல் சாம்பியன். அதனால் மதிப்பெண் பற்றிய கவலை இல்லாமல் சீட் கிடைத்தது. அவளுக்கு அம்மா இல்லை. அப்பா இன்னோரு பெண்ணை மணந்து இவளை தாத்தா வீட்டில் விட்டு சென்றார். இப்பொழுது தாத்தாவும் இல்லை. அதனால் தாத்தாவின் விருப்பப்படி நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பதை தன் ஒரே லட்சியமாக கொண்டால். அதன் படி இப்பொழுது கல்லூரியில் சேர்நதாகிவிட்டது. தாத்தாவிற்கு பெரிதாக சொத்து என்று எதுவும் இல்லை.  அதனால் இருந்த சொந்த வீட்டை தன் உடற்கல்வி ஆசிரியரின் உதவியுடன் விற்று அந்த பணத்துடன் படிக்க சென்றால். கல்லூரியில் சேர்ந்தது  போக மீதி பணம் விடுதியில் தங்க போதுமானதாக இல்லை அதனால் சின்ன வீடு கிடைக்குமா என்று தேடினால்.. பெரிய நகரத்தில் சிறிய வீடே அதிக தொகையுடன் கூற சற்றே ஏமாற்றம் , இருந்தும் மனம் தளராமல் தேட ஒரு வீடு கிடைத்தது. ஓரளவுக்கு பெரிய வீடே அதுவும் இவள் எதிர்பார்த்த வாடைக்ககைக்கு  ஒரே சிக்கல் என்று ப்ரோக்கர் சொன்னது ஏற்கனவே இருந்த குடும்பத்தில் இருந்த பெண் ஒருத்தி இறந்துவிட பெற்றோர்கள் அவள் நினைவை மறக்க வெளிநாடு சென்று விட்டனர். வீட்டில் அனைத்தும் இருந்தது பராமரிக்க ஆள் வேண்டும் என்பதால் இந்த சொற்ப வாடகையாம்.

சுழியம்Where stories live. Discover now