ரம்யா வீடு அழகாக இருந்தது அவளின் குடும்பத்தை போல. அன்பான அம்மா, அமைதியான அப்பா, ஒரு அண்ணன் படித்து முடித்து வேலையில் இருக்கிறார், அடுத்து ரம்யா பின் அவளின் தம்பி நகுல். அனுவிற்கு தன் அம்மா நினைவு வர சற்று சோகம் ஆனால், ரம்யாவிற்கு அனுவின் குடும்ப சூழல் தெரிந்தபடியால் உடனே அவளை புரிந்து கொண்டு அவள் கவனத்தை மாற்றினால். அவள் அண்ணனுக்கு அனுவை பார்த்ததும் பிடித்து போனது, அவள் தம்பி நகுல் அவளிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான் அவள் பெற்றோரும் நல்ல அக்கறையுடன் பேசினார்கள். அவளுக்கு புது குடும்பம் கிடைத்தது போல நல்ல உணர்வு ஏற்பட்டது. அவள் தந்தை அவளின் வீட்டை பற்றி விசாரித்தார் பின் அங்கு முன்பு வசித்த ராமநாதன் நல்ல நண்பன் என்று கூறினார் பின்பு எதோ கூற வந்தவர் அமைதியானார்.பின்பு விழா முடிந்து கிளம்ப தயாரானால் அனு. அனைவரிடமும் விடைபெற தயாரானாள், அப்பொழுது மணி 8 ரம்யாவின் அப்பா, தான் வீடு வரை வந்து விடுவதாக கூறினார் இவள் எவ்வளவோ மறுத்தம் அவர் விடுவே இல்லை ரம்யாவும் வற்புறுத்தவே இருவரும் சென்றனர். அவர் அமைதியாகவே வந்தார். அனுவிற்கு இந்த புதிய அன்பு புதிய அனுபவமாக இருந்தது. அம்மாவை தவிர யாரும் இவ்வளவு அன்பாக அவளிடம் இருந்ததில்லை. வீடு வந்ததும் ரம்யா அப்பா கிளம்புவதாக கூறினார். வீட்டினுள் வெளிச்சம் தெரிந்தது, இவளுக்கு நல்ல ஞாபகம் இருந்தது வேறந்தா லைட் மட்டும் தான் போட்டால் மற்றதை நிறுத்தி இருந்தால். ஒரு சின்ன குழப்பம்..
ரம்யா அப்பா கிளம்பும் முன், வேறந்தா லைட் போட்டு வம்திருக்கலாமே மா, பரவாயில்ல உள்ள நிறுத்தாம வந்துட்ட போல என்றார், அனுவும் சிரித்தபடி மாத்தி போட்டுட்டேன் நினைக்குறேன் என்றால்.. அவர் போகும் முன் ஏதாவது பிரிச்சனை இல்லை ஏதாவது வேண்டும் என்றால் தயங்காமல் ரம்யாவிடம் அல்லது என்னிடம் கேட்கலாம் என்று கூறிவிட்டு சென்றார். அனுவிற்கு இனம் புரியாத மகிழ்ச்சி தனக்காகவும் சிலர் இருக்கின்றினார் என்று. வீட்டினுள் நுழைந்தால், ரம்யா வீட்டிலே சாப்பிட்டதால் முகம் கழுவி விட்டு படுக்கலாம் என்று பாத்ரூம் சென்றால். முகம் கழுவும் பொழுது நல்ல சில்லென்று காற்று வீசியது, சன்னல் திறந்துள்ளதா என்று பார்த்தால் இல்லை, சரி ஏதோ என்று நினைத்தவளாய் முகம் கழுவி சட்டென்று கண்ணாடி பார்த்துவிட்டு துண்டை எடுத்தால், கண்ணாடியில் பார்த்தது அவள் முகம் மாரி தோன்றவில்லை, வேறொரு பெண்ணின் முகம் அனால்அதே உடை தான். திடீரென ஒரு பயம் பற்றிக்கொண்டது அவளை துண்டை மெதுவாக நகர்த்தி பார்த்தால் அவள் முகம் தான் , ஏதோ நாம் தான் கற்பனை செய்கிறோம் என்று படுக்க சென்று விட்டாள்.
VOCÊ ESTÁ LENDO
சுழியம்
Terrorஅனுவின் புதிய வீட்டில் நடக்கும் சில மர்மமான மற்றும் புதிரான விஷயங்களில் சிக்கி தவித்து அதை கண்டறிய முற்படுகிறாள், அப்பொழுது அவள் வெளிக்கொணர்ந்து வந்த விஷயங்கள் அவளின் வாழ்வை எவ்வாறு மாற்ற போகிறது என்பதை பார்ப்போம்