அனுவும் அஜயும் பேசி கொண்டே அவர்கள் வீதியை அடைந்தனர் அப்போது அஜய் அனுவிடம் எப்படி ராகுவை பற்றி விசாரிப்பது என்று யோசித்து கொண்டே வந்தான்.அச்சமயம் இருவரும் அதிரும் படி ஒரு காட்சியை கண்டனர், அங்கே தூரத்தில் ஓர் உருவம் அனுவின் வீட்டில் நுழைந்தது. அந்த உருவத்தை தொலைவில் இருந்து கண்டாலும் இருவருக்கும் நன்றாகவே அது ராகு என்று தெரிந்தது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இருவரின் முகத்திலும் பல குழப்பமான கேள்விகள். அனுவிற்கோ இவன் எப்படி அந்த உயரமான பூட்டு போட்ட கதவை திறந்து ஒவ்வொரு முறையும் செல்கிறான் அது எப்படி சாத்தியம் என யோசித்தால் அஜய் அடடா இம்முறை என்ன நடக்க போகிறதோ என்று பயந்தான் மெல்ல இருவரும் சமாளித்து அவனை பின் தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் அனு வீட்டை அடைந்த போது வீடு அவள் பூட்டியது போல் பூட்டியே இருந்தது இருவரும் அங்கேயே அதிர்ந்து நின்றனர் பின் அஜய் அந்த பூட்டை நன்றாக இழுத்து பார்த்தான் நன்றாக பூட்டி இருந்தது. பின் அனுவை நோக்கினான் கண்களில் கேள்விகளோடு அவளுக்கும் இதே சந்தேகம் தான் அதனால் அதை நாம் பின்பு ஆராய்ந்து கொள்வோம் என்பது போல் சைகை செய்தால் அந்நேரம் வீட்டின் பின்புறம் ஏதோ சலசலப்பு அப்போதுதான் இருவருக்கும் வந்த வேலை நினைவு வர அனு சட்டென்று பூட்டை திறந்தாள். இருவரும் வேகமாக ஓடிச் சென்று வீட்டின் பின்புறத்தை அடைந்தனர் அங்கு ராகு விற்கும் எஸ்தர்க்கும் பெரிய சண்டை ராகு அந்த பெட்டியை எடுக்க முயன்று கொண்டிருந்தான் எஸ்தரோ பெட்டியின் மேல் ஆணி அடித்தது போல் உட்கார்ந்து இருந்தது அது அனுவை எடுக்க எப்படி அனுமதிக்கவில்லையோ அதே போல ராகுவையும் விரட்டியது இதை கண்ட அனுவிற்கு அந்த பெட்டியின் மீது ஆர்வம் பொங்கியது பின் தன் அருகில் நின்ற அஜயின் நினைவு வர அவனை சட்டென நோக்கினால் அவனோ இவன் பூனையுடன் விளையாடி கொண்டிருப்பது போல் தோன்றவோ என்னவோ விரைந்து சென்று அவன் கைகளை பிடித்து "இந்த நேரத்தில் உனக்கு இங்க என்ன விளையாட்டு அதுவும் தனியா? நீ வந்தது அம்மாவுக்கு தெரியுமா?" என்று சரமாரியாக கேள்விகளை கேட்டான் ராகுவோ அமைதியாக அந்த பெட்டியை நோக்கி விட்டு அவன் கேள்விகளுக்கு ஏதும் விடையளிக்காமல் அந்த இடத்தை விட்டு வீட்டை நோக்கி கிளம்பினான் அஜயும் அனுவும் அவனை பின் தொடர்ந்தனர் அவன் இவர்கள் தொடர்வதை பார்த்து விரைந்து வீடு நோக்கி சென்றான் இதை கண்ட அஜய் அனுவை நோக்கி நாம் பிறகு சந்திகலாம் என்று கூறி புன்னகைத்து "ராகு ஏன் இப்படி நடந்து கறான் தெரியல அவன் செஞ்சதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றான் அதற்கு அனு" அச்சோ! பரவாயில்லை நான் இங்க குடிவந்ததிலிருந்து அவன் அடிக்கடி வந்து பூனையோடு விளையாடுவான் மத்தபடி எந்த தொந்தரவும் தரமாட்டேன்" என்றால் பதறியபடி சரி என்று கிளயம்பியவனிடம் விடை பெற்று உள்ளே சென்றால் அப்போது தான் தன் பைகளை வீட்டின் பின்புறம் விட்டு வந்தது நினைவு வர அங்கு சென்றால் அங்கு எஸ்தர் ஒரு பள்ளம் பறித்து கொண்டு இருந்தது அந்த பெட்டியை எடுக்கலாம் என்று இவள் அருகில் சென்றால் அது மிகவும் ஆக்ரோஷத்துடன் அவளிடம் சீறியது அவள் சரி பின்பு பார்த்து கொள்வோம் என்று விட்டு விட்டால்.
அங்கே அஜய் ராகுவை
பின்தொடர்ந்து சென்றான் அவர்கள் வீடு வாசலிலே அவள் அக்கா உட்கார்ந்து இருந்தாள் ராகுவின் புதிரான நடவடிக்கைகளை அவள் கவனிக்காமல் இல்லை இருந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துகொள்ள வில்லை அதிலும் எப்போதும் அந்த வீட்டிற்கு செல்வதும் கேட்டால் பூனையுடன் விளையடுவதாக சொல்வதும் சில சமயம் அவளுக்கு எரிச்சல் ஊட்டியது இப்போது அவன் தந்தை வெளியூரில் இருந்து அவனை காண வேண்டும் என்று வீடியோ கால் செய்த போது அவன் அறையில் இல்லாதது கண்டு அதிர்ந்து பின் வீடு முழுக்க தேடியும் பயனின்றி வெளிய வந்தவள் அவன் அந்த வீட்டை நோக்கி சென்றது தெரிந்து அவனை அழைத்தாள் அவனோ அந்த வீட்டை நெருங்கி விட்டான் பின் அவள் அவன் வெளியே கடைக்கு அஜயுடன் சென்றிருப்பதாக
கூறினால் பின்பு வெளியே சென்று பார்த்த போது அங்கு அஜயும் அனுவும் இவனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்சிறிது நேரத்தில் பெரும் குழப்பமே அங்கு இருந்தது பின்னர் அஜயும் ராகுவும் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர்உள்ளே வந்தவர்களிடம் அவள் விசாரணையை தொடங்க ஆனால் முதலில் ராகுவிடம் ஏன் இத்தனை மணிக்கு அந்த வீட்டிற்கு சென்றாய் என்று கேட்டால் அதற்கு அவன் ஏதும் பதில் சொல்லவில்லை
நேராக தன் அறைக்கு சென்று கதவை முடிகொண்டான் அது அவன் அம்மாவிற்கு கடுங்கோபம் வந்தது அதை அவர் காட்டும் முன் அதை அஜய் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன என்று கூறினான்.
YOU ARE READING
சுழியம்
Horrorஅனுவின் புதிய வீட்டில் நடக்கும் சில மர்மமான மற்றும் புதிரான விஷயங்களில் சிக்கி தவித்து அதை கண்டறிய முற்படுகிறாள், அப்பொழுது அவள் வெளிக்கொணர்ந்து வந்த விஷயங்கள் அவளின் வாழ்வை எவ்வாறு மாற்ற போகிறது என்பதை பார்ப்போம்