பாகம் 5: டைரி

208 22 2
                                    

அடுத்த நாள் நகுளின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல அயத்தமானால் அனு. அவளிடம் புதிய நல்ல ஆடை எதுவும் இல்லை என்ன செய்வது என்று தன்னிடம் ஏற்கனவே இருந்த ஆடைகளை புரட்டிவிட்டு அலமாரியை வேகமாக சார்த்தினால். அந்த வேகத்தில் அலமாரியின் மேல் இருந்து ஒரு துணி பறந்து விழுந்தது மேலே பார்த்தால் ஏதோ இருப்பது தெரிந்தது. என்ன என்று பார்த்தால் ஒரு அட்டைப்பெட்டி இருந்தது அதில் நிலா என்று வெளியில் எழுதி இருந்தது. ஆர்வத்தில் உள்ளே திறந்து பார்த்தால். சில துணிகள் இருந்தது. சரி இதில் ஏதாவது தேறும் என்று பார்த்தால் ஒரு அழகான சிவப்பு ஆடை அவளை ஈர்த்தது. இன்னும் தேடினால் ஏதாவது வேற ஆடை கிடைக்குமா என்று பார்த்தால்,அடியில் ஏதோ தட்டு பட்டது. அது ஒரு டைரி பிரித்து பார்த்தால் அதற்குள் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது. டைரயினை படுக்கையில் அப்படியே வைத்து விட்டு அலைபேசியை பார்த்தால் ரம்யா தான் சிறிது நேரத்தில் ஆரம்பிக்க உள்ளது விழா சீக்கிரம் வரும்படி அனுப்பியிருந்தால். உடனே அந்த அழகிய சிவப்பு ட்ரெஸ்ஸை அணிந்து கொண்டு புறப்பட்டாள். நடந்து சென்ற வழியில் ராகுவின் வீட்டை பார்த்தால். அவன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தான். இவளை கண்டதும் ஓடி வந்து கேட் அருகில் நின்றான். இவள் புன்னகைத்தாள். அவன் முறைத்துக்கொண்டே நிலா பொருளை யாராவது தொட்டால் அவளுக்கு பிடிக்காது என்று கூறிவிட்டு வீட்டில் ஓடி மறைந்தான் இவள் ஏதும் கேட்கும் முன். சரி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று அவள் ரம்யா வீட்டை நோக்கி சென்றால்.

சுழியம்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ