பாகம் 2: புதிய வீடு

274 26 2
                                    

அனுவிற்கு ஒரே சந்தோஷம் புதிய வீட்டிற்குள் நுழைந்ததும். அதை நன்றாக ஆராய ஆரம்பித்தாள்,  ஒரு பெரிய ஹால் ,இரண்டுஅறை இருந்தது ஒன்று மட்டும் பூட்டி இருந்தது அதன் சாவியை அவளிடம் புரோக்கர் கொடுக்கவில்லை, ஒரு சமையலறை மற்றும் குளியலறை இருந்தது, வெளியே வாராண்டா அதை அடுத்து மாடி படி இருந்தது பெரிய கேட். அவளிடம் பெரிதாக ஏதும் சாமான்கள் இல்லாததால் எடுத்து வந்த துணிகளை மட்டும் அந்த பூட்டு போடாத இருந்த ஒரு அறையில் வைத்தால் அழகான படுக்கை அறை, ஒரு பெரிய கண்ணாடி கொண்ட அலமாரி அதில் அனைத்தையும் வைத்து விட்டு மார்க்கெட் சென்று காய்கறி பழங்கள் வாங்க சென்றால், வந்து பிரிட்ஜ்ல் வைத்து விட்டு டிவியை போட்டாள் அவள் கணிப்பு படி டிவி வரவில்லை. சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடித்தது ஒரே குழப்பம் யாருக்கும் தெரியாதே தான் இங்கு இருப்பது என்று யோசனையில் பீப் ஹோல் வழியாக பார்த்தால் யாரும் இல்லை. கதவை நீண்ட யோசனைக்கு பின் திறந்து பார்த்தால் ஒரு குட்டையான பருமனான பெண் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டுமா என்று வினவினாள், வேண்டாம் என்று மறுத்த அனு உள்ளே சென்றால். இருள் சூழ துடங்கியதும் சில்லென்று காற்று வீசியது ஆனால் அனுவிற்கு தன் தனிமை புதிதாக இருந்தது. ஏதோ யோசனையுடன் படுக்க சென்றால் காலை கல்லூரியில் முதல் நாள் தாமதமாக செல்ல வேண்டாம் என்று நினைத்தவளாய் படுக்கை அறைக்கு சென்றால் அலமாரி திறந்து இருந்தது கொண்டு வந்த  பைகளும் வெளியே இருந்தன தான் ஏதோ ஒரு நினைவில் வெளியே வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று படுக்க சென்றுவிட்டாள்.

சுழியம்Tempat cerita menjadi hidup. Temukan sekarang